Sunday, October 18, 2009

என் ஆன்மீகம்!

தலைப்பை பார்த்து ஏதோ கடவுளைப்பற்றி பேசப்போகிறான் என்று எண்ண வேண்டாம். இது கடவுளைப்பற்றிய ஆராய்ச்சியல்ல. கடவுளைப்பற்றி நாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதனைப்பற்றியது.

இந்த உலகம் பகுத்தறிவாலனைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதைப்பற்றியது.

அதாவது, பகுத்தறிவாளன் என்பவனை இந்த உலகம் எப்படி பார்க்கிறது என்று பார்த்தோமேயானால், ஏதோ தேசத்துரோகி போலவும், மனநலம் பாதிக்கப்பட்டவனைப்போலவும், அவனை ஒரு தீண்டத்தகாத மனிதனாகவே கருதிவிடுகிறது இந்த உலகம்.

ஒரு சிறு உதாரணம், ஒரு பேருந்தில் இரண்டு வாலிபர்கள் உட்கார இடமில்லாமல் நின்றுகொண்டு பயணம் செய்கிறார்கள். அதில் ஒரு நபர் நெற்றில் விபூதிப்பட்டையும், கழுத்திலே உருத்திராட்ச கொட்டையும், படியவாரிய தலையுமாக இருக்கிறார். ஆனால் மற்றொருவரோ, இதற்க்கு நேர்மாறாக பட்டையும் கொட்டையும் இல்லாமல் நவநாகரீகமாக இருக்கிறார். அப்பொழுது, ஒரு நிறுத்தத்தில் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அதே பேருந்தில் ஏறுகிறார். அவருக்கும் உட்கார இடமில்லை, அவரும் நின்றுகொண்டுதான் பயணம் செய்கிறார். சென்னை பேருந்தின் நிலைமையை கூறவே வேண்டாம் எப்பொழுதும் சற்று கூட்டமாகவே இருக்கும். அந்த கூட்டத்தில், இந்த விபூதிபட்டையிட்ட ஆசாமி அந்த பெண்மணியின் இடுப்பில் கைவைக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி திரும்பி பார்க்கும்போது இந்த இருவர் மட்டுமே இந்த பெண்மணியின் பின்னால் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த தவறுசெய்த ஆசாமி தனக்கு எதுவுமே தெரியாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இந்த பெண்மணிக்கோ நவநாகரீக ஆடவன்மீதுதான் சந்தேகம் எழுகிறது, அவரை அடித்தும்விடுகிறார். காரணம், நிஜமாகவே தவறு செய்தவர் முகத்தில் தெய்வகலை தெரிகிறது அவர் தவறுசெய்திருக்க மாட்டார். இவர் முகத்தில் அது இல்லை ஆதலால் இவர் செய்திருக்கக்கூடும் என்று பதிலளிக்கிறார்.

அதாவது, நமது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், கடவுளை வழிபடுபவர்களும், அதன் அடையாள சின்னமான விபூதிப்பட்டை அணிபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றும். கடவுள் இல்லை என்போரும், அவரை வணங்காதோறும் கெட்டவர்கள் என்றும் முடிவுகட்டிவிடுகின்றனர்.

இந்த முடிவு சரியானதா என்று கேட்டால் "இல்லை".

நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார், "நீங்கள் எதற்க்காக கடவுளை வழிபடுவது இல்லை" என்று. அதற்க்கு நான் திருப்பிக்கேட்டேன், "நீங்கள் எதற்க்காக கடவுளை வழிபடுகிறீர்கள்" என்று கேட்டேன். அவர், "நான் நலமாய் இருக்க வேண்டும், தன் குடும்பம் நலமாய் இருக்கவேண்டும், கைநிறைய சம்பாதிக்கவேண்டும், நோய் மற்றும் பிணிகளும் வராமளிருக்கவேண்டும், எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும், நான் செய்த பாவங்களை மன்னித்தருளவேன்டும்,..." என்று அவர் அடுக்கிக்கொண்டே இருந்தார்.

அதாவது, கடவுள் அவருக்கு கேட்டதை கொடுக்கும் அலாவுதீன் பூதமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.

நண்பர் அனைத்தையும் அடுக்கி முடித்தபின் நான் கூறினேன், "நான் நன்றாக இருக்கிறேன், ஆரோக்கியமாக இருக்கிறேன், உயிர்வாழ தேவையான அளவு சம்பாதிக்கிறேன், எனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை என்மேல் எனக்கு இருக்கிறது, நான் பாவம் செய்வது இல்லை பாவம் என்று தெரிந்தபின் ஊன் உண்ணுவதையும் விட்டுவிட்டேன். ஆதலால், எனக்கு கடவுள் அவசியமற்றவர் ஆகிறார்" என்றேன்.

இதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், இதை அவர் ஏற்றுக்கொண்டால் அவர் பாவம் செய்தவர் ஆகிறார்.

அவர் மற்றொரு கேள்வியும் கேட்கிறார் இவ்வாறு, "ஒரு ஊரில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்படுகிறது என்றால் அதை அனைவரும் பின்பற்றவேண்டும். அதைத்தான் ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள். நீ கூறுவது ஊரினின்று நான் தனித்திருப்பேன் என்பதுபோல் இருக்கிறதே" என்று கேட்கிறார்.

நான் பதிலளித்தேன், "ஊரில் அந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பிருந்தே நான் அதை கடைபிடிக்கிறேன் ஆகையால் என்னை பொறுத்தவரை அந்த சட்டம் எனக்கு தேவையில்லை" என்றேன். அவரோ, "ஊர் மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் உனக்கும் உண்டு" என்றார்.

நான் மற்றுமொரு விளக்கமளித்திருந்தேன், "ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் அவர் சீடர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டுவந்து சந்தேகம் ஒன்றை கேட்டனர். அது, "குருவே, உங்கள் கட்டுப்பாடுகள் அனைத்தும் அனைத்து சீடர்களுக்கும் பொதுவானதே அப்படி இருக்கையில் நரேந்திரனுக்கு மட்டும் நீங்கள் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லையே ஏன்?" என்று வினவினர். அதற்க்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகிறார் "சீடர்களே, நீங்கள் நெருப்பு தண்ணீர் பட்டாள் அணைந்துவிடுவீர்கள். ஆனால், நரேந்திரன் சூரியன் தீயது அவனை அண்டாது, அதனால்தான் அவனுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது" என்றார். அப்படித்தான், கடவுளரும், கோட்பாடுகளும், வேத, சாஸ்திர, இதிகாச, புராணங்கள் அனைத்தும் வாழ்க்கை நெறிமுறை தவறிய மக்களுக்குதானே தவிர, நெறிமுறையோடு வாழும் மனிதர்களுக்கு அல்ல" என்றேன்.

இதையும் வழக்கம்போல நண்பர் உணர மறுத்தார்.

அவருக்கு, நடைமுறை விளக்கம் புரியவில்லையென்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் க்வாண்டம் தியரி பற்றியும் கூறினேன் அதையும் ஏற்க்க மறுத்துவிட்டார் வழக்கம்போல.

அவர் "மனிதன் வாழ்வதற்கு சரியான வழி ஆன்மீகம் மட்டுமே" என்கிறார். நான் "சரியாக வாழும்போது ஆன்மீகம் எதற்கு?" என்கிறேன்.

சிறிது நேரத்திற்க்குப்பிறகு இந்த உரையாடலை நான் தனிமையில் யோசித்தபோது ஒன்றுமட்டும் புரிகிறது. தனிமனித ஒழுக்கமில்லாத நபர்களை நெறிப்படுத்துவதற்கு மட்டும்தான் கடவுள் தேவைப்படுகிறாரே தவிர ஒழுக்கத்தோடு வாழ்பவர்களுக்கு கடவுள் இருந்தாலும், இல்லையென்றாலும் ஒன்றுதான். அவர்கள் எப்போதும் தனிமனித ஒழுக்கம் தவறுவது கிடையாது.

இதுவும் ஒருவகையில் என் அனுபவம்தான், ஒழுக்கநெறி தவறிய காலங்களிலெல்லாம் நான் ஆன்மீகவாதியாக இருந்திருக்கிறேன். இப்பொழுது நெறியோடு வாழும்போது கடவுள் இல்லை என்கிறேன்.

அனுபவம் என்றதும் என் தந்தை என்னிடம் ஒருமுறை கூறியது ஞாபகம் வருகிறது. "நீ கடவுள் இல்லை என்கிறாயே, கண்ணதாசன் மிகப்பெரிய எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் அவர் திராவிட கட்சியிலேயே சிலகாலம் இருந்தார். பின்பு, அங்கிருந்து பிரிந்து வந்து கடவுள் இல்லை என்றவர் தன் வாயாலேயே கடவுள் இருக்கிறார்" என்று கூறியிருப்பதாக என்னிடம் கூறியிருந்தார்.

இதன் பிறகு நான் கண்ணதாசனின் பல நூல்களை ஆராய்ந்தபோது அவர் "அர்த்தமுள்ள இந்து மதம்" என்ற நூலில் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது, "இந்த நாட்டில்(இந்தியாவில்) நாத்திகத்தை தோற்றுவித்தவன் நல்லவனாக இருந்திருந்தால் நான் ஆத்திகனாக மாறியிருக்க மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

கண்ணதாசன் அவர்கள் நாத்திகம் நல்லதா கெட்டதா என்பதைவிடுத்து அதை தோற்றுவித்தவன் நல்லவனா கெட்டவனா என்று ஆராய்ந்திருக்கிறார். நாத்திகனாக இருந்தபோதுதான் துன்பங்களை அனுபவித்தார் என்றால் ஆத்திகம் பேசியபோது என்ன சுகபோக வாழ்க்கையிலா வாழ்ந்தார். இல்லையே, அதே துன்பத்தில்தானே வாழ்ந்திருக்கிறார். நான் கண்ணதாசனைப்பற்றி அவதூறு சொல்லவில்லை அப்படி ஏதேனும் இருப்பின் மன்னித்துவிடுங்கள்.

மற்றொரு நண்பர் கேட்டிருந்தார், "உலகிலுள்ள சக்திகளையெல்லாம் ஒன்றன் மீது ஒன்று அடுக்கினால் உச்சியில் ஒரு சக்தி நிச்சயம் உண்டு. அது! எந்த சக்தி?" என்று. நான் சில கேள்விகள் அவரிடம் கேட்டேன். அவர் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் வாங்கியிருந்தார், அவருக்கு புரியும்படியாகவே கேட்டேன். "நீங்கள் எந்த விசை காரணமாக பூமியின்மீது நிற்கிறீர்கள், இந்த பூமி எந்த விசை காரணமாக அந்தரத்தில் நிற்கிறது, இந்த பூமி எவ்வாறு சுழல்கிறது" என்று வினவினேன்.

அவர் அளித்த பதில்கள், "நாம் பூமியின்மீது நிற்க புவி ஈர்ப்புவிசை எனும் காந்தவிசை உதவிசெய்கிறது. ஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் சம அளவு அதாவது 50% மின்காந்த ஈர்ப்புவிசை மற்றும் மின்காந்த எத்திர்ப்புவிசை செயல்படுகிறது. இந்த மின்காந்த ஈர்ப்புவிசை பூமியை சுற்றியுள்ள அனைத்து கோள்கள்மீதும் இருப்பதால் பூமியை கீழேவிழாமல் அந்தரத்தில் நிற்க்கச்செய்கிறது. இந்த மின்காந்த எதிர்ப்புவிசை பூமியை சுற்றியுள்ள அனைத்து கோள்கள்மீதும் இருப்பதால் பூமியை தன்னைத்தானேயும் மற்றும் சூரியனையும் சுற்றிவர உதவிசெய்கிறது" என்றார்.

மறுபடியும் நான் கேட்டேன், "இங்கே பிரதானமாய் இருப்பது காந்தவிசைதானே!"

"ஆமாம்!" அவர்.

"நீங்கள் மேற்சொன்ன மூன்று விசைகளில் ஒன்று இல்லையென்றாலும் மானுடம் வாழ்வது சாத்தியமா?" என்றேன்.

அவர் "இல்லை" என்றார்.

"அப்பொழுது, அந்த உச்ச சக்தி காந்தவிசைதான்".

No comments:

Post a Comment