Monday, July 20, 2009

பிராமி எழுத்துக்கள்


தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும்.


இந்தியாவில் கி்டைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகாலில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.

பழந்தமிழகம்


180 மில்லியன் ஆண்டுகள் முன்பு அண்டார்டிகாவை மையமாகக் கொண்ட பெருநிலப்பரப்பு ஒன்றிருந்தது என "பிரிட்டிசு அண்டார்டிகா சர்வே"யின் இணையதளம் தெரிவிக்கிறது. தென்னமரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து ஆகிய ஒருங்கிணைந்த பெருநிலப்பரப்பின் மையத்தில் அண்டார்டிகா இருந்தது. அந்த பெருநிலப்பரப்பை கோணடுவானா என்று பெயரிட்டு அழைத்தார்கள். கோண்டுவானாப் பெருநிலத்தின் அடியில் ஓரிடத்தில் வெந்தணல் கனன்று கொண்டிருந்தது. அது உண்டாக்கிய எரிமலைப் பிரதேசம் ஒன்றிருந்தது. அந்த எரிமலைப் பிரதேசத்தின் எச்சங்களை தென்னாப்பிரிக்காவிலும் படகோனியாவிலும் அண்டார்டிகாவிலும் தாசுமேனியாவிலும் இன்றும் காணலாம் என்கின்றனர் அறிவியல் வல்லுனர்கள். கோண்டுவானா உடைந்து பிரிந்தது மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது. தென்னமரிக்காவும் ஆப்பிரிகாவும் மேற்குப் பகுதிகளாக பிரிந்தன. அண்டார்டிகாவும் ஆசுதிரேலியாவும் இந்தியாவும் நியுசிலாந்தும் கிழக்காகவும் பிரிந்தன. 150 மில்லியன் ஆண்டு முன்பு நிகழ்ந்த அந்தப் பிரிவினால் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே கடல்பாதை தோன்றிற்று.
இரண்டாவது கட்டமாக 130 மில்லியன் ஆண்டு முன்பு ஆப்பிரிக்க-இந்தியத்தட்டில் இடம் பெற்றிருந்த தென்னமரிக்கா அதிலிருந்து கழன்று கொண்டது. தென்அட்லாண்டிக் கடல் திறந்து கொண்டதால் இது நிகழ்ந்தது. இந்துமாக்கடலின் தரை விரிவாவதால் அண்டார்டிகாவிலிருந்து ஆப்ரிக்க-இந்திய தட்டு பிரிந்தது. கடைசியாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும் நியுசிலாந்தும் பிரிந்தன. கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவெனில் தென்அட்லாண்டிக் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட குறுந்தட்டுகளாக அது உடைந்து பிரிந்து சிதறியதைக் குறிப்பிட்டாகல் வேண்டும்.
650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும், இந்தியாவும், தென்னமரிக்காவும், ஆப்பிரிக்காவும் அண்டார்டிகாவும் ஒரே கண்டமாக விளங்கின. அங்கிருந்து தான் தமிழர் வரலாற்றை நாம் தொடங்க வேண்டும். வடவேங்கடம் தென்குமரி இடையிலான தமிழ்கூறும் நல்லுலகம் நம் வரலாற்றின் இறுதிக்கட்டம். முதற்கட்டம் கோண்டுவானாப் பெருங்கண்டத்தில் துவங்குகிறது. அந்தக் கண்டத்தை இலெமூரியாக் கண்டம் எனவும் அழைப்பர். குமரிக்கண்டம் என்றும் கூறுவர். கோண்டுவானா பெருங்கண்டத்தின் நிலம்வளர் தாவரங்கள் பற்றியும் நீர்வாழ் மீனினம் பற்றியும் அங்கு திரிந்த விலங்கினங்கள் பற்றியும் கலிபோர்னியப் பல்கலைக்கழகம் பல அரிய உண்மைகளை கண்டெத்துச் சொல்லியுள்ளது.
கடினப்பாறைகள் பல அடங்கிய பெருந்தொகுதி ஒரு கூட்டமாக நகருவதை 1960 ல் அறிஞர்கள் தட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஒரு தட்டின் மீதமர்ந்ததிருந்த கண்டங்களும் கடல்களின் தரையும் அந்தத் தட்டு நகரும்போது நகர்வதனை Plate - tectonics என்று பெயரிட்டனர். 1912ல் தொடங்கிய ஆய்வு 1960 ல் பெயரிடுவதில் முடிந்தது. 1912 ல் ஆல்பிரட் வெக்கனர் அவர்களும் பிராங்க் டெய்லர் அவர்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் ஒரேயொரு பெருங்கண்டமாக விளங்கியது என்றும் அதிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்து சிதறியவையே இன்றுள்ள கண்டங்கள் எனவும் கண்டறிந்தனர்.
ஆல்பிரட்டு வெக்னர் (1880-1930) செருமானிய வானவியல், நிலவியல் அறிஞராவார். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின் தந்தையாக அவர் போற்றப்படுகிறார். அவரது "ORIGIN OF CONTINENTS AND OCEANS" என்ற நூல் உலகமே ஒரே கண்டமாக விளங்கிய உண்மையை உரைத்தது. அந்தக் கண்டத்திற்கு பங்கேயா என அவர் பெயரிட்டார். பங்கேயா என்றால் எல்லா நிலமும் All Earth என்ற பொருள் தரும் சொல்லாகும். நாம் அந்தப் பெருங்கண்டத்தைப் பற்றி அறிந்தாக வேண்டும். கல்தோன்றி, கற்களின் பெருந்திரள் தொகுதிகள் நகர்வதே கண்டங்களின் சுழற்சி எனில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பற்றி நுண்மாண் நுழை புலமொடு சொல்லிய தமிழ்க் கவிஞனையும் நாம் நினைவு கூர்ந்தாகல் வேண்டும்.
உலகத்தின் வரைபடத்தில் - இன்றுள்ள கண்டங்களை தனித்தனியே வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்று பார்த்தவர் ஆல்பிரட் வெக்னர். ஒரு புதிரை விடுவிப்பது போல அவர் தேடினார். படங்களை பொருத்தி வெற்றி கண்டார். எல்லாக் கண்டங்களின் படங்களும் பொருந்தின. ஒன்றாக இருந்த பெருங்கண்டமே உடைந்தது என நிறுவ இது அவருக்கு கிட்டிய முதல் சான்றாக அமைந்தது. தெனன்மரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டெக்கப்பட்ட விலங்கினங்களின் மற்றும் தாவரங்களின் புதை வடிவம் பொருந்துவதைக் கண்டறிந்தார். இரு கண்டங்களின் பாறைகளும் பொருந்துவதை அறிந்தார். பனிப்பாறைகளின் உறைநிலைப் படிவங்கள் தென்னமரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஆசுதிரேலியாவிலும் 300 மில்லியன் ஆண்டுகள் முன்பு படர்ந்திருந்தன. தெற்கு பகுதிக் கண்டங்கள் மீது பனிப்பாறைகள் படர்ந்திருந்தது போல வடக்கிலுள்ள கண்டங்கள் மீது ஏனில்லை? வட கண்டங்கள் நிலநடுக்கோட்டருகில் அப்போது இருந்திருக்கக் கூடும்.
ஆல்பிரட் வெக்கனரின் கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. HAROLD JEFERY ஒரு கேள்வி எழுப்பினார். கடினப்பாறைகள் நிறைந்த பெருநிலப்பரப்பு எவ்வாறு கடலின் தரையை உழுதவண்ணம் நகர்ந்திருக்க முடியும்? கடலின் தரை அதனால் உடைந்திருக்காதா? விரிசல் விட்டிருக்காதா? என்று வினா எழுப்பினார். வினாக்கள் எழுப்பாமல் விடைகள் கிடைப்பதில்லை. விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கக் கேள்விகளே காரணமாக அமைந்தன. அறிவாளர்கள் என தனிக் கூட்டத்துக்கு முத்திரை குத்தி ஆய்வு நம் பணி அல்ல எனத் தமிழர்களாகிய நாம் நினைக்கிறோம். மேனாடுகளில் மக்களும் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் அந்நாடுகள் அறிவியலில் முன்னேறுகின்றன. நாம் பின்தங்கியுள்ளோம். JUERGEN HENRICHS என்பவர் அப்படி ஆய்வு செய்பவர். தமது வினாக்களை இணையத்தில் பதிவு செய்து அதனைப் படிப்பவர்களிடம் பதில் கிடைக்குமா என எதிர்பார்ப்பவர். அவர் செருமானியர். Scientific American என்ற ஏட்டை ஆங்கிலத்தில் அவர் படிக்கவில்லை. செருமானிய மொழிப் பதிப்பு வழியாகப் படித்தார். தாய்மொழி வழியில் அவர் படித்ததால் அவரால் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானியர் பன்னெடுங் காலமாகச் சூரியனின் Photospere நடுநிலைக் கோட்டருகே (Equator) வேகமாகக் சுழல்வதை அறிந்துள்ளனர். துருவங்கள் அருகே அவ்வாறு வேகமாகச் சுழல்வதில்லை. அதில் Photospere என்றால் என்ன? ஞாயிறு - விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔ¤க்கோசம் என பேராசிரியர் அ.சிதம்பரநாதர் செட்டியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1965ல் வௌ¤யிட்டு 1988 ல் மறுமதிப்பு செய்யப்பட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக வௌ¤யீடு கூறுகிறது. மொழிபெயர்ப்புச்சிக்கல் காரணமாகவே ஆங்கிலங்கலந்த தமிழ் என்னும் புதிய மணிப்பிரவாளம் வழக்காற்றில் உள்ள உண்மையை உணர வேண்டும். உணர்ந்து நாணுற வேண்டும்.
"When rotating objects contract, the core, becoming more compact, rotates faster than surface a difference that is necessarily most marked at the equator and least at the poles". இது அந்த தன்னார்வ ஆய்வாளரின் விளக்கமாகும். அவ்வாறு விளக்கமளிக்கும் அவர் "Continents are being carried along by an eastward equatorial stream in the earth's mantle, driven by the earth's core rotaing faster than surface" எல்லா நிலநடுக்கமும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். குடிமகன் ஒருவனுக்கும் குவலயத்தில் நிகழும் நிகழ்வுகளுக்குரிய காரணங்களை கண்டறியும் துடிப்புள்ளது கண்டு தமிழ்க்குடிமகன்கள் நாணிட வேண்டாமா? ஈட்டிய பொருளை குடிக்கக் செலவிட்டு குடும்பத்தையே மறந்துவிடும் குடிமகன்கள் உலகின் பிறநாட்டு குடிமகன்கள் போல நேரத்தையும் நினைப்பையும் உலகின் நிலைபற்றி ஆராயச் செலவிடும் நாள் வந்தால் அந்நாளே தமிழர் வரலாற்றில் பொற்காலமாகப் போற்றப்படும். அண்ணா பேசிய பேச்சு நிலையும் நினைப்பும் உங்கள் நினைவில் நிழலாடவில்லையா! நினைப்பு உயர்ந்தால் தான் நாட்டின் நிலை உயரும் என்றாரே நம் உயிரினில் கலந்து உணர்வினில் வாழும் ஒப்பிலாப் பேராசான் அறிஞர் அண்ணா. உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் என்ற வள்ளுவமும் அண்ணன் கருத்தை ஒத்ததே!
64,186,000 சதுர மைல் பரப்புள்ள பசிபிக் பெருங்கடல் சராசரியாக 15,215 அடி ஆழமுடையது.
மரியானா பகுதியில் போட்ட குழி 36,200 அடி ஆழமுடையதாக இருந்தது. அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு 33,420,000 சதுர மைல்களாகும்.
சராசரியாக 12,881 மைல் ஆழமும் போர்ட்டோரீகா அருகில் 28,231 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் 28,350,000 சதுர மைல் பரப்புள்ளது.
சராசரியாக 13,002 மைல் ஆழமும் சாவா அருகில் 25,344 அடி ஆழமும் கொண்டது. ஆர்டிக்கடல் 5106 சதுர மைல் பரப்பும் சராசரியாக 3953 அடி ஆழமும் கொண்டது. ஈராசியா அருகில் 17,881 அடி ஆழமுடையது. நிலவுலகின் 70 சதவீத பரப்பை கடல்களே நிறைந்துள்ளன.
ஞால நிலப்பாகம் இன்றுள்ளவாறு 5 கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொனறு தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana) பாலதிக்கம் (Baltica) அமசோனியம் (Amazonia) அங்காரம் (Angara) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுத்திருந்தது என்ற தேவநேயப் பாவாணர் தம் தமிழர் வரலாறு நூலில் வி.ஆர். ராமச்சந்திர தீட்சதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியா எனும் நூல் கருத்தை பதித்துள்ளார்.
நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும்
திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம்.
உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில் ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும் போது எக்கெல் இந்து மாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்ரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவி இருந்த ஒரு கண்டமாயிருந்தது என்பார்.
கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு அதில் வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமூரியா என்று பெயரிட்டுள்ளார் எனவும் பாவாணர் "தமிழர் வரலாறு" எழுதுகையில் பதிந்துள்ளார். இலக்கியச் சான்றுகள் ஏற்புடையன அல்ல என்று தமிழிலக்கியச் சான்றுகளை ஒதுக்கித் தள்ளுவோர் உள்ளனர். இலமூரியா பற்றித் தமிழர் கூறினால் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள். ஆங்கிலேயர் கூறினால் ஆகா! ஆகா! என நீங்கள் மெச்சக்கூடும். இங்கு கூறுபவர் ஆங்கிலேயரல்ல. பிரெஞ்சுக்காரர்.
James Churchward 5 நூல்கள் எழுதினார். அவை 1. The Lost continent of Mu 2. The Children of Mu 3. The Sacred Symbols of Mu 4. The Cosmic Forces of Mu 5. The Second Book of the Cosmic Forces of Mu சேம்சு சர்ச்வார்டின் நண்பர் அகத்தும் அவர் மனைவி அலிசுலெ பிளங்கோனும் மாயன் நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காக மத்திய அமெரிக்க காடுகளில் திரிந்தவர்கள். பல பழைய இலக்கிய சுவடிகளை கண்டெடுத்தார்கள். அதனை மொழி பெயர்த்தார்கள். மாயன் நாகரிகத்தில் அரசி மூ கோலோச்சினாள். அதைக் கொண்டு அவர்கள் இலமூரியாக்கண்டத்தை மூ என்று அழைத்தார்கள். மூ என்னும் கண்டம் 5000 மைல் நீண்டது. 3000 மைல் அகண்டது என சேம்சு சர்ச்வார்டு கூறுகிறார். அந்தப் பிரெஞ்சு தம்பதிகள் கண்டெடுத்த மாயன் நாகரிக இலக்கிய ஏடுகளில் இருந்து தானறிந்தவற்றை சேம்சு சர்ச்வார்டு மேற்சொன்ன 5 நூல்களில் பதிவு செய்தார். மறைந்த மூ கண்டம் 60000 ஆண்டு முன்பு ஒரு கொடி நிலநடுக்கத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலில் மூழ்கியதாக அவர் கூறுகிறார். அவாய் தீவுகளும் பசிபிக் தீவுகளும் மறைந்த அந்தக் கண்டத்தில் மலைகளாக இருந்த உயர்ந்த சிகரங்களாக விளங்கியமையால் கடலுள் மூழ்காமல் மிச்ச முள்ளவை என்கிறார் அவர். மறைந்த கண்டம் பற்றி கல்வெட்டெழுத்துகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மறைந்த கண்டத்தின் வரைபடம் செதுக்கப்பட்டிருந்தது. டாக்டர் சேவியர் காப்ரெழா அக்கல்வெட்டை கண்டெடுத்தார். இராபர்ட் சாரௌக்க அதனைப் புகைப்படம் பிடித்தார். ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆதம் மாலிக்கின் செயலரான பரீதா இசுகோவியத் 1972 ல் Mauiக்கு வந்தார். அங்கிருந்த அழிவுகளையும் வரலாற்றையும் ஆய்ந்து அவை உண்மை எனும் முடிவுக்கு வந்தார். 50000 ஆண்டு முன்பு இலமூரியா(அ)மூ கண்டம் மறைந்த போது 2000த்துக்கு மேல் தமிழர்களாகிய எங்களுக்கு எண்ணிக்கை தெரியாதே? மேடைதோறும் ஈராயிரமாண்டு நாகரிகம் எமதென்று கிளிப்பிள்ளைகள் போல் சொல்லும் புலவர் கூட்டம் எங்களுடையது என்கிறீர்களா? மாயன் நாகரிகமாவது 50000 ஆண்டு சென்னையை ஒட்டியுள்ள பூண்டியில் 100000 ஆண்டு முன்பு தமிழன் வாழ்ந்தான். நம்ப மறுக்கிறீர்களா? New India Express செப்டம்பர் 6-2004 இதழின் முதல்பக்கத்தைப் பாருங்கள். நாங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் என்று தப்பிக்க பார்க்காதீர்கள்.
One Lakh Years ago People Lived in Poondi முதல் பக்கத்தில் எல்லாப் பதிப்புகளிலும் வெளியான செய்தி. தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு பற்றிய செய்தி. கண்டெடுத்த அறிஞர்களை போற்றுவோம். கடல்கொண்ட குமரிக் கண்டத்தை கடலடியில் தேடுவோம்.

Monday, July 13, 2009

நேனோ தொழில்நுட்பம்

இப்போது எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். வாஷிங் மெஷின் வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி, ஏசி வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். நேனோ என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு? இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே, உண்மையிலேயே அதில் அவ்வளவு பயன் இருக்கிறதா?

நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல். எப்படி நாம் ஊருக்கு ஊர் இருக்கும் தொலைவை கிலோ மீட்டரிலும், துணியின் நீளத்தை மீட்டரிலும், நகத்தின் தடிமனை மில்லி மீட்டரிலும் சொல்கிறோமோ, அதைப் போல மிகச் சிறிய அளவை நேனோ மீட்டரில் சொல்லலாம். ஒரு மி.மீ.இல் ஆயிரத்தில் ஒரு பங்கை, மைக்ரோ மீட்டர் அல்லத் மைக்ரான் என்று சொல்லலாம். ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் (நே.மீ.) என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள்.

நேனோ மீட்டர் அளவுகளில் இருக்கும் பொருள்கள், நம் கண்ணுக்கு தெரியாது. நம் கண்களுக்கு தெரியும் ஒளியின் அலை நீளம் சுமார் 400 முதல் 700 நே.மீ. ஆகும். தற்போது அறிவியல் வழக்கில் ஒரு பொருளின் எந்த அளவாவது (நீளம், அல்லது அகலம் அல்லது தடிமன்) 100 நே.மீ.க்கு குறைந்து இருந்தால், அதை நேனோ அளவு உள்ள பொருள் (nano size material) என்று சொல்லலாம் என்று பலர் கருதுகிறார்கள். சிலர், ஒரு பொருளின் எல்லா அளவுகளுமே 10 நே.மீ.க்கு குறைவாக இருந்தால்தான் அதை நே.மீ. அளவு உள்ள பொருள் என்று சொல்லலாம் என்கிறார்கள். மார்கெட்டிங்கில் இருக்கும் மக்கள், முடிந்த வரை தங்கள் product எல்லாவற்றையுமே நேனோ என்று சொல்லத்தான் விரும்புகிறார்கள்.

நேனோ என்ற அளவானதற்கு என்ன எடுத்துக்காட்டு கொடுக்க முடியும்? நம் கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா போன்ற உயிரினங்களே மைக்ரோ மீட்டர் அளவுக்கு (அதாவது நே.மீ. போல் ஆயிரம் பங்கு) இருக்கிறது. அதனால் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் அல்லது உணரும் எந்தப் பொருளுமே நேனோ மீட்டர் அளவில் இருக்காது.

ஒரு அணுவின் அளவானது சுமார் 0.1 நே.மீ. இருக்கும். பல அணுக்கள் சேர்ந்த ‘அணுக் கூட்டம்' நே.மீ. அளவு இருக்கும். சில நூறு அல்லது ஆயிரம் அணுக்கள் சேர்ந்தால்தான் அது நே.மீ.அளவு வரும். பொதுவாக காற்றில் இருக்கும் மூலக்கூறுகள் அனைத்தும் நேனோ மீட்டர் அளவில் தான் (அல்லது அதை விடக் குறைவாக) இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், உலகு எங்கும் நேனோ டெக்னாலஜி அளவில் இருக்கும் பொருள் (ஆக்சிஜன்) தான் நாம் உயிர் வாழவே உதவுகிறது. அதை நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாமா?

ஆனால், திடப் பொருளாக நே.மீ.அளவில் இருக்கும் பொருள்களைத்தான் நாம் நேனோ டெக்னாலஜி என்று சொல்வதில் பயன்படுத்துகிறோம். ஒரு பொருள், மிகச் சிறிய துகளாக இருக்கும் பொழுது அதன் மேல் பரப்பளவு (surface area) மிக அதிகமாகும். உதாரணமாக, ஒரு செ.மீ. அகலம் இருக்கும் ஒரு cube எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பரப்பளவு 6 சதுர செ.மீ. ஆகும். இதை நான்கு சம பாகங்களாகப் பிரித்தால்? அவற்றின் மொத்த பருமன் (total volume) அதே அளவு இருக்கும். ஆனால் பரப்பளவு அதிகமாகும்.

இப்படி மறுபடியும் மறுபடியும் பிரித்தால், அதன் பரப்பளவு மிக அதிகமாகும்.இப்படி பரப்பளவு அதிகமாவதால் சில பயன்கள் உண்டு. வினை ஊக்கியாக செயல்படும் பொருள்களின் பரப்பளவு அதிகமானால், அதன் வினை ஊக்கும் திறன் அதிகரிக்கும். இந்த வகையில் நேனோ பொருளின் பயன் அதிகம்.ஆனால், உண்மையில் நேனோ பொருளில் என்ன சிறப்பு? ஒரு அணுவானது தனியாக இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (atomic properties). அவை கோடிக்கணக்கான அணுக்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (bulk properties). இவை சில நூறு அணுக்கள் அல்லது சில ஆயிரம் அணுக்கள் இருக்கும்பொழுது அதன் பண்பு முற்றிலும் மாறியதாக (அதாவது ஒரு அணுவை போலவும் இருக்காது, கோடிக்கணக்கான அணுக்களைப் போலவும் இருக்காது) இருக்கும். அப்படி மாறி இருக்கும் பண்பு நமக்கு பயன் உள்ளதாக இருந்தால், அது நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம்.

எடுத்துக் காட்டாக, தங்கம் ஒரு அணுவாக இருந்தால் அதற்கு நிறம் என்று ஒன்றும் கிடையாது. (ஆவி நிலையில் தங்கம் இருந்தால், அது கண்ணுக்கு தெரியும் ஒளியை உறிஞ்சாது). அதுவே நேனோ அளவில் இருந்தால், அது பச்சை நிறமாக இருக்கும். மி.மீ. அளவில் இருந்தால், அது ஒளியை ஊடுருவி செல்ல விடாது. இங்கு தங்கத்தின் நிறம் பச்சையாக இருந்தால் என்ன பயன்? குறிப்பாக ஒன்றும் இல்லை என்று சொன்னால், “நான் தங்கத்தை நேனோ டெக்னாலஜியில் தயாரித்து இருக்கிறேன்” என்று தண்டோரா போடுவது (உண்மை என்றாலும், வாங்குபவர்க்கு பயனற்றது என்பதால்) ஏமாற்று வேலைதான்.

சில சமயங்களில் சில உலோகங்களால் பாக்டீரியா மற்றும் பல கிருமிகள் கொல்லப்படும். சில்வர் நேனோ என்று சொல்லப்படுவது இந்த வகை. (ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் இதை ஆராய்சி செய்து ”தங்கள் சாதனத்தில் இவை பயன் தருகின்றனவா?” என்று பார்த்து சொல்கின்றனவா, இல்லை சும்மா சொல்கின்றனவா என்று தெரியவில்லை). சில்வருடன் தாமிரம் (காப்பர்) சேர்த்தால் இன்னமும் நல்லது. வெள்ளியால் சில வகை கிருமிகள் கொல்லப்படும். தாமிரத்தால் இன்னும் சில வகை கொல்லப்படும். இரண்டும் சேர்ந்தால் இந்த இரண்டு வகை தவிர மூன்றாவதாக சில கிருமிகள் கொல்லப் படும். ஏனென்றால், இந்த மூன்றாம் வகை கிருமிகளின் ‘தோலை' திறக்கும் திறன் தாமிரத்திற்கு உண்டு. ஆனால் அவற்றின் உள்ளே தாமிரத்தால் பாதிப்பு இல்லை. வெறும் தாமிரம் மட்டும் இருந்தால், தோல் பாதிக்கப் படும். பிறகு கிருமி அதை சரி செய்து கொள்ளும். வெள்ளியினால், தோலை பாதிக்கவோ ஊடுருவி செல்லவோ முடியாது. ஆனால், உள்ளே சென்று விட்டால், கிருமியை கொல்ல முடியும். தாமிரமும் வெள்ளியும் சேர்ந்து இருந்தால்தான் இந்த வகை கிருமிகளை கொல்ல முடியும்.

சில சமயங்களில் நேனோ வகைப் பொருள்கள் தயார் செய்யப் படும். ஆனால், அவற்றில் 'நேனோப் பண்புகள்' நமக்கு பயன் உள்ளதாக இருப்பதில்லை. சொல்லப்போனால் தொல்லையாகத்தான் இருக்கிறது. இந்த இடங்களில் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் வேலை செய்கிறோம்' என்று சொல்வது விவரம் தெரியாதவர்களுக்கு தவறான கருத்தை சொல்வதாக நான் நினைக்கிறேன். எடுத்துக் காட்டாக, சிலிக்கன் சில்லு செய்யும் பொழுது, இப்போது 65 நே.மீ. மற்றும் 35 நே.மீ. அளவில் டிரான்ஸிஸ்டர்கள் செய்கிறார்கள். இதனால், டிரான்ஸிஸ்டரில் பெரிய முன்னேற்றம் இல்லை. அளவு சிறிதாக இருந்தால், ஒரு சில்லில் நிறைய டிரான்ஸிஸ்டர்கள் வைக்க முடியும். அவ்வளவே. நேனோ அளவில் இருப்பதால் இதற்கு சிறப்பு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப் போனால், இவற்றை இணைக்கும் கம்பிகள் இவ்வளவு சிறிதாக செய்யும் பொழுது இவற்றின் நேனோ பண்புகளால் எதிர்பாராத பாதிப்புகள் தான் வருகின்றன.

இந்த மாதிரி கம்பெனிகள் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் செய்கிறோம்” என்று புதிய விஷயத்தைப் போல சொல்வது எனக்கு சரி என்று படவில்லை. அது சரி என்றால், ‘நாங்கள் நேனோவை விட சிறிய அளவில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து, அதைப் போலவே சிறிய அளவில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளி விடுகிறோம். இதை தினமும், தூங்கும் போது கூட செய்கிறோம்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளலாம்.

நேனோ டெக்னாலஜி என்று ஒருவர் சொன்னால், “இதை நேனோவில் செய்யாமல், மைக்ரானில் செய்தால், அல்லது மி.மீ.இல் செய்தால் என்ன மாற்றம் இருக்கும்?” என்று கேளுங்கள். அந்த மாற்றம் எளிதில் கணிக்கக் கூடியது என்றால், இந்த டெக்னாலஜி ஒன்றும் பெரியது அல்ல. உதாரணமாக, நே.மீ. இருக்கும் பொருளில் பரப்பளவு அதிகமாக இருக்கும். அந்தப் பொருள் சிறிய அளவில் இருப்பதால், அதன் மொத்த அளவு குறைவாக இருக்கும். இவை இரண்டும் தவிர வேறு வித்தியாசமான, பயனுள்ள பண்பு இருந்தால்தான் அது உண்மையிலேயே நேனோ டெக்னாலஜி. இல்லாவிட்டால் வெறும் மார்கெடிங் தான். இந்த வகையில் ஏசி, வாசிங் மெஷின் இவற்றில் இருக்கும் சில்வர் நேனோ கூட உண்மையிலேயே பயன் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. இவற்றை மைக்ரான் அளவில் செய்தாலும் கிருமிகள் சாகும் என்றுதான் நினைக்கிறேன். மைக்ரான் அளவில் செய்தால் பொருள் செலவு கொஞ்சம் அதிகம், அவ்வளவே.

சில பொருள்கள், நேனோ அளவில் இருக்கும் பொழுது அவற்றிற்கு காந்தப் பண்புகள் வருகின்றன. பெரிய அளவிலிருக்கும் பொழுது காந்தப் பண்புகள் இருப்பதில்லை. இவற்றை குவாண்டம் இயற்பியல் விளக்குகிறது. இம்மாதிரி பொருள்களை நேனோ என்று சொல்வதில் தவறில்லை.

MRI SCAN

MRI தொழில்நுட்பம்

உடலுக்குள் எந்த கருவியையும் நுழைக்காமல் உள்ளுறுப்புகளை துல்லியமாகப் படம் பிடிக்கும் இம்முறை மருத்துவ உலகில் எத்தகைய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை உலகம் முழுவதும் உள்ள 22 ஆயிரம் MRI கருவிகளைக் கொண்டு ஆண்டுதோறும் 6 கோடி படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். நூறாண்டுகளுக்கும் முன்பாக உருவாக்கப்பட்ட X-கதிர் படப்பிடிப்பு (X-ray radiography) முறைக்குப் பின் மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட படப்பிடிப்பு முறைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது MRI. காந்த ஒத்திசைவு (magnetic resonance) என்ற அறிவியல் கோட்பாடு 1946-லேயே கண்டு பிடிக்கப்பட்டாலும், காந்த ஒத்திசைவு படப்பிடிப்பு என்ற மருத்துவ சாதனத்தின் அடிப்படைக்கான ஆராய்ச்சி 1969ல்-தான் ஆரம்பித்தது.

காந்த ஒத்திசைவு என்பது சில தனிமங்களின் (elements) அணுக்கருவின் (nucleus) காந்தத்தன்மையை ஆதாரமாகக் கொண்ட ஒரு இயற்பியல் கோட்பாடு. உயிர்கள் அனைத்திலும் பரந்து கிடக்கும் தண்ணிரின் முக்கிய தனிமமான ஹைட்ரஜன் அணுக்கள் மிக அதிகமாக ஆராயப்பட்டவையாகும். 1952ல் இயற்பியல் நோபெல் விருது வாங்கிய பெலிக்ஸ் ப்ளாக் (Felix Bloch) மற்றும் எட்வர்ட் பர்செல் (Edward Purcell) என்ற அமெரிக்க விஞ்ஞானிகள் அணுக்களின் காந்தத்தன்மையைப் பயன்படுத்தி, முதல் காந்த ஒத்திசைவு சோதனையை நடத்தி ஒரு புதிய வேதியல் ஆராய்ச்சிக் கருவியைக் கண்டுபிடித்தனர்.

பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளிக்கூடங்களில் நடத்திய சோதனையில் அறிந்தது, ஒரு காந்தத் துண்டை நூலில் கட்டித் தொங்கவிட்டால் அது வடக்கு தெற்காக திரும்பி நிற்கும் என்பது. இதற்குக் காரணம், பூமியின் காந்தப்புலமே என்பதை அறிவோம். பூமியின் காந்தசக்திக்குப் புறம்பாக அக்காந்தத்துண்டை நகர்த்த வேண்டுமானால் நாம் சிறிது ஆற்றலைச் செலுத்த வேண்டும். தண்ணீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களையும் இது போல காந்தத்துண்டுக்களாக கொள்ளலாம். தண்ணீரை ஒரு பெரிய மின்காந்தப் புலத்தில் வைத்தோமானால், ஹைட்ரஜன் அணுக்களும், அம்மின்காந்தப்புலத்தின் வடக்கு தெற்குத்திசைகளை நோக்கி திரும்பி நிற்கின்றன. அவற்றை மாற்றியமைக்க வேண்டுமெனில் ரேடியோ அலைகளை (Radiowaves) ஆற்றலாகப் பாய்ச்ச வேண்டும். ரேடியோ அலைகளின் அலை நீளம் (wavelength) அல்லது அதிர்வெண் (frequency) மற்றும் வீச்சு (amplititude) போன்றவை அணுக்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் அணுக்களின் காந்தத்தன்மையும் ரேடியோ அலைகளும் ஒத்திசைந்தால் தான், ரேடியோ அலைகளின் ஆற்றலை உட்கொண்டு, அணுக்கள் மின்காந்தப்புலத்தை எதிர்த்து நிற்கும். இந்தக் காந்த ஒத்திசைவின் அடிப்படைத் தத்துவத்தை வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் முழுக்கப் பயன்படுத்தி மூலக்கூறு அமைப்பை (molecular structure) பலபத்து வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த காந்த ஒத்திசைவுக் கோட்பாட்டை மேலும் ஒருபடி எடுத்துச் செல்பவையே காந்த ஒத்திசைவு பிம்பங்கள் (magnetic resonance images). மேலே சொல்லப்பட்ட மின்காந்தம் முழுப்பரப்பளவிலும் ஒரே சீராக (homogenous) இருக்குமாயின், அப்பரப்பளவுக்குள் வைக்கப்பட்ட ஒரு பாத்திரத்திலோ அல்லது ஒரு உடலுறுப்பிலோ உள்ள தண்ணீர் ஹைட்ரஜன் அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக ரேடியோ அலைகளுடன் ஒத்திசையும். ஆனால் மின்காந்தப் புலத்தை அப்பரப்பளவில் நீள வாக்கிலோ அல்லது அகல வாக்கிலோ படிப்படியாக அதிகரித்துக் கொண்டே (magnetic field gradient) போனால், ஹைட்ரஜன் அணுக்களின் காந்த ஒத்திசைவு இடத்துக்கு தகுந்தவாறு மாறியமையும். இதன் மூலம் அந்த பரப்பளவில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களை ரேடியோ அலைகளை வைத்து படம் பிடிப்பது (imaging) சாத்தியமாகும். மேலும் ஒரு உடலுறுப்பில் ஏதாவது கட்டி அல்லது நோய் தாக்கியிருந்தால் அந்தப் பகுதியில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள், மற்ற பகுதிகளில் உள்ள அணுக்களை விட மாறுபட்ட அலை நீளத்தில் ஒத்திசைவு அடையும் என்பதால், MRI படங்களில் அவற்றைக்காண முடியும்.

மருத்துவ நோபெல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டத் துறையான காந்த ஒத்திசைவு பிம்பமுறை (Magnetic Resonace Imaging or MRI) கண்டுபிடிப்புக்குக் காரணமானவர்கள் யார் என்று முடிவு செய்வதில் நோபெல் தேர்வுக்குழு பல வருடங்கள் திணறிக்கொண்டிருந்தது. கடைசியில் பால் லாட்டர்பருக்கும், சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்டுக்கும் பரிசைப் பகிர்ந்தளித்தது. ஆனால் இதைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவராகக் கருதப்பட்டு வரும் மற்றொரு விஞ்ஞானி ரேமண்ட் டமாடியான் (Raymond Damadian), தனக்கும் இந்த நோபெல் பரிசு அளிக்கபட்டிருக்க வேண்டும் என்று பிரபல அமெரிக்கச் செய்தித்தாள்களில் 290,000 டாலர்கள் செலவில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டார். இவர் 1988ல் அமெரிக்காவின் மிக உயர்ந்த தேசிய தொழில்நுட்ப விருதை பால் லாட்டர்பருடன் பகிர்ந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதும் பல வித சர்ச்சைகளுக்குப் பின்னால் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே இருவருக்கும் MRI கண்டு பிடிப்புக்கான விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. நேபெல் பரிசு விதிகளில் ஒரு துறையில் மூன்று பேர்கள் வரை பரிசு அளிக்கப்படலாம் என்றிருந்தபோதிலும் தன்னை வேண்டுமென்றே விலக்கிவிட்டு இருவரை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கடுங்கோபத்துக்கு உள்ளாகியுள்ளார் டமாடியான்.

காந்த ஒத்திசைவு பிம்பமுறை (MRI) தொழில் நுட்பத்தை முதலில் கண்டு பிடித்து பிரபல அறிவியல் பத்திரிகையான Nature-ல் 1973-ஆம் ஆண்டு வெளியிட்டார் அப்பொழுது நியுயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பால் லாட்டர்பர். இருப்பினும், அவர் இந்த கோணத்தில் ஆராய்ச்சி செய்யத் தூண்டுகோலாக அமைந்தது என்னவோ, அதே பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மருத்துவ விஞ்ஞானி ரேமண்ட் டமாடியான். அவர் 1969லிருந்தே புற்று நோய் தாக்கிய உறுப்புக்களை காந்த ஒத்திசைவுக் கருவிகளை வைத்துப் படம் எடுக்கும் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். ரேமண்ட் டமாடியான், அவருடைய ஆரம்பகால ஆராய்ச்சி முடிவுகளை மற்றொரு பிரபல அறிவியல் பத்திரிகையான Science-ல் 1971-ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்.

லாட்டர்பரின் தொழில் நுட்பம் தான் இன்றுள்ள MRI கருவிகளின் அடிப்படையாக அமைந்தாலும், டமாடியான்தான் மருத்துவத்தில் படம் பிடிக்கும் கருவியாக காந்த ஒத்திசைவு பிம்பமுறையை பயன்படுத்தலாம் என்ற நோக்கத்துடன் செயல் திட்டத்திலும் இறங்கினார். அவரே MRI கருவிகளைத் தயாரிக்கும் FONAR என்ற முதல் தொழிற்சாலையையும் தொடங்கியது மட்டுமல்லாமல், தொடர்ந்து இத்துறையில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். (FONAR கம்பெனியே டமாடியான் சார்பாக தற்பொழுது நோபெல் பரிசைக் குறை கூறி பிரபல அமெரிக்கச் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் லாட்டர்பர், தனது ஆரம்ப கால ஆராய்ச்சிக்குப் பிறகு, பெரிதாக இத்துறையில் தீவிரமாக அக்கறை காட்டவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்டு 1974ல் தொடங்கி இன்று வரை கண்டுபிடித்து வழங்கிய தொழில்நுட்ப உத்திகளும், பல கணிப்பொறிச் செய்வழி முறைகளும் (computer algorithms) இந்தத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. எனவே மூன்று பேருக்கும் நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று டமாடியானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இரண்டாவது சூரியன்

இஸ்லாமிய குரான் படி அல்லது கிறிஸ்தவர்களின் பைபிளின் படி முதல் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்தது ஈடன் தோட்டத்திலாம். ஏவாள் எனப்பட்ட அந்த உலகின் முதல் பெண், தடைசெய்யப்பட்ட ஒரு பழத்தை சாப்பிட செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டாள். அதாவது அங்கு உலகின் முதல் சோசியல் இஞ்சினியரிங் ஹேக்கிங் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இது என்னை சக்கரியா சிட்சின்னிடம் (Zecharia Sitchin) கொண்டு சென்றது. அவரும் இதையேத் தான் சொல்கின்றார். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. அந்த காலத்திய ஈராக் பகுதிகளில் கொலோச்சியிருந்த நாகரீகம் சுமேரிய நாகரீகம். இந்நாகரீகத்தின் மிச்சங்களிலிருந்து கிடைத்த சுருள்களை படித்து ஆராய்ந்த சக்கரியா சிட்சின் சொல்வது என்னவென்றால் குரங்குமுக சாயல்கொண்டிருந்த நம் முகம் திடீரென இன்றைக்கு நாமிருக்கும் மனித முக சாயலாக மாற வெளி கோளை சேர்ந்த ஒரு கும்பல் தான் காரணம் என்கின்றார். ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு(Nibiru) என்ப்படும் ஒரு கோள் நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள் என்கிறதாம் அந்த பழங்கால சுருள்கள். பூமியில் கிடைக்கும் தங்கம் அவர்களின் விருப்ப பொருளெனவும் அதை தோண்ட நம் மக்களை வேலை வாங்கினார்கள் என்கின்றார் இந்த ஆய்வாளர். இந்த நேரத்தில் நம் இதிகாசங்களில் நாம் படிக்கும் விமானா, பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகள் நினைவுக்கு வந்துசெல்கின்றன.

விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என தியரி பேசப்படுகின்றது.

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக.அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.

ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.

இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரு தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரு அனுனாக்கிகள் கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரு கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர். எல்லாம் அடுத்த வருடம் மத்தியில் தெரிந்துவிடும்.

நாசா இந்த நிபிரு கதைகளையெல்லாம் சுத்தமாய் மறுக்கின்றது.http://astrobiology.nasa.gov/ask-an-astrobiologist/question/?id=2759

நன்றி

http://pkp.blogspot.com

காதல்

காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது.

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual. "Men, in some way, had become more like women, and women had become like men," Donatella Marazziti of the University of Pisa told New Scientist magazine.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானதுUniversity College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பின்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

'Love is blind' They found that the neural circuits that are normally associated with critical social assessment of other people are suppressed when people are in love. They said the findings may explain why some people are often "blind" to their partner's faults.

இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

The researchers said the finding may explain why people who are in love can sometimes obsess about their partner.

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.

பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்

பெண்களிடம் ஐ லவ் யு' சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி?

நியூயார்க்: கவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், சூஎக்ஸ்' உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது

எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரோமோசோம்களில் வித்தியாசம் உள்ளது. ஆண்களின் செல், சூஎக்ஸ்' மற்றும் சூஒய்' ஆகிய இரண்டு குரோமோசோம்களால் ஆனவை. பெண்களுக்கு இரண்டு குரோமோசோம்களுமே, சூஎக்ஸ்' வகையை சேர்ந்தவை. பெரும்பாலும் சூஎக்ஸ்' குரோமோசோம்கள் தானும் இயங்கி, மற்ற குரோமோசோம்களுடனும் இணைந்து இயங்கும் தன்மை கொண்டவை. இதனால், இது தன் பணியை சிக்கலாக்கிக் கொள்கிறது. இது தான் பெண்களின் குணமாக அமைந்து விடுகிறது. ஆண்களின் செல்லில் ஒரே ஒரு சூஎக்ஸ்' குரோமோசோம் தான் உள்ளது. இந்த குரோமோசோம், தான் இயங்குகையில், இன்னொரு குரோமோசோமுடன் இணைந்து இயங்க வாய்ப்பில்லாமல் போகிறது. ஏனெனில், இதனுடன் உள்ள சூஒய்' குரோமோசோம் ஒரு சில மரபணுக்களையே கொண்டுள்ளது. எனவே, விஷயத்தை சிக்கலாக்க வாய்ப்பில்லை. இது தான், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பரம்பரையான அடிப்படை குணம் மாறுவதற்குக் காரணம். முடிவெடுப்பதில் ஆண்கள் சூவெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்று இருப்பதற்கு இதுவே காரணம். இதன் அடிப்படையில் தான், தான் விரும்பும் பெண்ணிடம், சூஐ லவ் யு' வை வெளிப்படையாக, அதிக நாள் கடத்தாமல் சொல்லி விடுகின்றனர். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வகையில், சூசெக்ஸ்' உந்துதலுக்கும் ஆளாகின்றனர். ஒரு குழந்தையின் பாலை நிர்ணயிப்பது தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்களின் அமைப்பு தான் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நிர்ணயம் செய்வது, தாய் குரோமோசோம்களின் ஆதிக்கம் அதிகமா, தந்தையின் குரோமோசோம்களின் ஆதிக்கம் அதிகமா என்பதைப் பொறுத்தே அமைகிறது.

News By SNS News Service....

And Thanks to Dinamalar.com

தமிழன்-அப்துல்கலாம்

அப்துல் கலாம்

சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது" இவ்வாறு உயர்ந்த நிலையில் இருப்போரை ஷேக்ஸ்பியர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், இவற்றுள் இரண்டாம் நிலைக்குரியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அயராத உழைப்பு, விடாமுயற்சி, ஈடுபாட்டுடன் கூடிய ஆற்றல் மற்றும் திறமை ஆகியவற்றால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்ற புகழேணியின் உச்சியை அடைந்தவர்.

1931ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ம் நாள், தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்கோடியில், நடுத்தர இசுலாமியத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கலாம் அவர்கள். படகோட்டியாக வாழ்க்கை நடத்திவந்த அவருடைய தந்தை ஜைனுலாப்தீன், ஏட்டறிவில் குறைந்தவராக இருந்தாலும் உலகியல் அறிவில் சிறந்து விளங்கினார்; தாய் ஷியம்மா பாச மழை பொழிந்து தமது மக்களை வளர்த்து வந்தார். இளம் வயது அப்துல்கலாம் செய்தித்தாள் விற்று தனது குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கு உதவியவர்.

இராமநாதபுரம் ஸ்க்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில், கலாம் அவர்களின் பள்ளிப்படிப்பு துவங்கியது. அப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் அய்யாதுரை சாலமோன் அவர்கள், அப்துல் கலாமின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கலாம் அவர்கள் திருச்சி தூய ஜோசப் கல்லுரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு இயற்பியல் (Physics) படிப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பட்டப்படிப்பை முடித்த அப்துல் கலாம் அவர்கள், தன் அறிவுப்பசிக்கு இயற்பியல் மட்டுமே போதுமானதல்ல என்று உணர்ந்து, 1955ம் ஆண்டு சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Madras Institute of Technology) மாணவராகச் சேர்ந்தார்.

தம் கல்வி வாழ்க்கையில் அப்துல் கலாம் பல துன்பங்களையும், இடர்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ளநேரிட்டது. ஆனால், "மற்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது கல்வி; தன்னைத் தானே அறிந்து கொள்வதே உண்மையான அறிவு" என்ற அவரது தந்தையின் அறிவுரை இன்னல்களைக் களையும் மாமருந்தாகப் பயன்பட்டது. தன்னைத் தானே அறிந்துகொள்ளும் கலாம் அவர்களின் அறிவு வேட்கைக்கு உதவி புரிந்தவர்கள் அவரது பேராசிரியர்களான ஸ்பாண்டர், பண்டாலை மற்றும் நரசிம்ம ராவ் ஆகிய மூவருமாவர். அப்பேராசிரியர்களின் துல்லியமான அறிவுக்கூர்மை, தொடர்ந்த மற்றும் முழுமையான செயற்பாடுகள் ஆகியன, கலாம் அவர்கள் சிறந்த மாணவராகத் திகழ்வதற்குப் பேருதவி புரிந்தன. "இறைவனே உனது நம்பிக்கையாக, அடைக்கலமாக, நீங்காத் துணையாக இருக்கட்டும்; அவனே உன் எதிர்காலப் பயணத்தில் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கட்டும்" - இதுவே சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிய அப்துல் கலாம் அவர்களுக்குப் பேராசிரியர் ஸ்பாண்டர் வழங்கிய அறிவுரை.

சென்னையில் படிப்பை முடித்த அப்துல் கலாம் அவர்கள் பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பயிற்சிக்குப் பின்னர் இரண்டு இடங்களில் இருந்து அவருக்கு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று விமானப்படையில் பணிபுரியும் வாய்ப்பு; மற்றொன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி இயக்குநரகத்தில் (Directorate of Technical Development and Production) பணியாற்றும் வாய்ப்பு. இவ்விரண்டில் பின்னதைக் கலாம் தேர்ந்தெடுத்து அதில் 1958ம் ஆண்டு மூத்த அறிவியல் உதவியாளராகப் (Senior Scientific Assistant) பணியில் சேர்ந்தார். இப்பணியில் முழுமையான பயிற்சி பெறுவதற்காகக் கான்பூரில் உள்ள விமானச் சோதனை நிறுவனத்திற்கு கலாம் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பிறகு பெங்களூரில் புதியதாகத் துவக்கப்பட்ட விமானவியல் வளர்ச்சி நிறுவனத்தில் (Aeronautical Development Establishment) பணிக்கு அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) இயக்குநர் பதவியிலிருந்த பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அப்துல் கலாம் அவர்களுக்குக் கிடைத்தது; அவர்கள் சந்திப்பு நிகழ்ந்த ஒரு வாரத்தில், இந்திய விண்வெளி ஆய்வுக் குழு நடத்திய ஏவுகணைப் பொறியாளர் (Rocket Engineer) பதவி அப்துல் கலாம் அவர்களுக்குக் கிடைத்தது; அந்நிறுவனத்தில் இருந்த கணினி மையத்தில் தன் பணியை அவர் துவக்கினார். பின்னர் 1963ம் ஆண்டு அப்துல் கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (Indian Space Research Organization) சேர்ந்தார். அப்போது அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிறுவனத்தின் (National Aeronautics and Space Administration-NASA) அழைப்பின் பேரில் சுமார் 4 மாதம் அங்கு சென்று வந்தார். இது மட்டுமே அப்துல் கலாம் அவர்களின் அப்போதைய அயல்நாட்டு அனுபவமாகும்; மற்றபடி அவர் முழுக்க முழுக்க சுதேசி அறிவியல் அறிஞராகவே விளங்கினார். 1963ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அவர் தும்பாவில் அமைந்துள்ள துணைக்கோள் ஏவுகலன் தயாரிப்புக் குழுவில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார். இதுதான் இந்தியாவின் ஏவுகணை ஆய்வின் (Rocket research) துவக்கக் கட்டமாகும். எஸ்.எல்.வி - 3 (S L V 3) திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அப்துல் கலாம் சுமார் 44 துணைத்திட்டங்களை வடிவமைத்து, ஆய்வு நடத்தி, சோதனை செயற்பாடுகளை மேற்கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில்தான் 35 கிலோ எடை கொண்ட ரோகிணி 1 துணைக்கோளை எஸ்.எல்.வி 3 துணையுடன் விண்ணில் செலுத்தி, இந்திய விண்வெளி அறிவியலின் பெருமையை உலகறியச் செய்தார். இதைத் தொடர்ந்து அவரது சேவை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே சென்றது.

இந்தியப் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஏவுகணை வளர்ச்சியில் (Missile Development) பெரிதும் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக அக்னி, பிருத்வி, என்ற இரு ஏவுகணைகள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டன. தொடர்ந்து அர்ஜுன், திரிசூல், காஷ், நாக் ஆகிய விண்வெளி ஏவுகணைத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். நாட்டின் பாதுகாப்புத் துறையில் உயர் தொழில்நுட்ப ஆய்வு மையம் (Advanced Technology Research Centre) தோன்றுவதற்கு அப்துல் கலாம் அவர்களே முக்கிய காரணமாகும். இம்மையத்தின் முக்கியக் குறிக்கோள் எதிர்கால ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளுவதாகும். அடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து நாட்டின் பாதுகாப்புக்குத் துணை நிற்கும் வழிவகைகளை அப்துல் கலாம் அறிமுகப்படுத்தினார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சருக்கான அறிவியல் லோசகராகவும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் துறையின் செயலராகவும், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் அப்துல் கலாம் மிகச் சிறந்த சேவை புரிந்து வந்தார்; அண்மையில் மேற்கூறிய பதவிகளிலிருந்து விலகி, வருங் காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவதே தமது எதிர்காலத் திட்டம் என அறிவித்தார். வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்பதை அவர் நன்கு அறிந்தவர்; எனவே அவர்களிடம் அறிவியல் ஆர்வத்தையும், கூர்ந்து நோக்கும் திறனையும், ஆராய்ச்சி மனப் பான்மையையும் வளர்ப்பதையே தமது முக்கிய குறிக்கோள்களாக ஏற்றுக்கொண்டார். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைப்பதற்குப் பாடுபடுவதை முக்கிய நோக்கமாக அறிவித்துள்ள அப்துல் கலாம், இந்நோக்கத்தை எட்டுவதற்கு இளைஞர்களை ஆயத்தப் படுத்துவதற்கான முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

1981ம் ஆண்டு இந்திய அரசு "பத்ம பூஷண்" விருது கொடுத்து அப்துல் கலாம் அவர்களைப் பாராட்டியது; தொடர்ந்து 1990ம் ஆண்டு "பதம விபூஷண்" விருதும், பின்னர் இந்திய அரசின் மிக உயர்ந்த "பாரத ரத்னா" விருதும் அவருக்கு அளிக்கப்பெற்றன. இன்று இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மிகப்பெரிய அறிவியல் மேதையான அப்துல் கலாம் அவர்களுக்கு விருதுகளும், பாராட்டுகளும் கிடைப்பதில் வியப்பேதுமில்லை. பல்வேறு பல்கலைக் கழகங்கள் அறிவியல் துறையில் கௌரவ முனைவர் பட்டம் தந்து அவரது சேவையைப் பாராட்டியுள்ளன. மேலும் விண்வெளி ஆய்வுக்கான டாக்டர் பிரென் ராய் விருது, நேரு நினைவு தேசிய விருது, நாயுடம்மா நினைவுத் தங்கப் பதக்கம், அறிவியலுக்கான மோடி நினைவுப் பரிசு, அறிவியல் தொழில்நுட்பத்திற்கான பிரோடியா பரிசு, ஆர்ய பட்டா விருது, தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி நினைவுப் பரிசு போன்ற பல்வேறு பரிசுகளும், விருதுகளும் அப்துல் கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பரிசுகளையும், பாராட்டுகளையும் கண்டு அவர் மயங்கிவிடவில்லை. எளிய வாழ்க்கை முறைகளையும், மென்மையான குண நலன்களையும் கொண்டுள்ள அப்துல் கலாம் இன்றும் நாள்தோறும் 18 மணி நேரம் உழைக்கிறார். இசையிலும், தமிழிலக்கியத்திலும், நூல்கள் எழுதுவதிலும், கவிதை புனைவதிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வள்ளுவத்தைத் தம் வாழ்க்கை நெறிக்கு வழிகாட்டியாகக்கொண்ட அப்துல் கலாம் அவர்களின் குறிக்கோள் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்பதே. இத்தகு சிறப்பும், மேன்மையும் மிக்க அறிவியல் மேதை ஒருவர் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை தருவதாகும்.

நன்றி: நிலாச்சாரல்

மனிதகுலத்தை வழிநடத்தும் மரபணுக்கள்

மரபணுக்களில் இயற்கைச் சூழல் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறதென்பது மர்மமாகவே உள்ளது.
சமகாலத்தில் ஜீன் (மரபணு) தொழில்நுட்ப ஆய்வுகள் வெகுவாக முன்னேற்றமடைந்து நாளாந்தம் புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. புதிய ஜீன் சிகிச்சை முறை மூலம், நீரிழிவு, புற்றுநோய், குருதிக் கொதிப்பு போன்ற பல்வேறு கொடிய நோய்களையும் குணப்படுத்துதல் சாத்தியம் என சமீபத்தில் அமெரிக்க தேசிய ஆரோக்கிய மத்தியஸ்தான விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கை வெளியிட்டிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

இவ்வகை ஆய்வுகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மனித இனத்தின் குண இயல்புகள் மற்றும் உளவியல் நிலைகளில் கூட சிலவகை ஜீன்கள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாவரவர்க்கம், பூச்சியினங்களின் இயல்புகள் குறிப்பிட்ட ஜீன்களுடன் தொடர்புபட்டிருப்பதை கிரைகர் மாண்டல், தோமாஸ் ஹன்ட், மோகன் முதலிய ஜீன் தொழில்நுட்ப நிபுணர்கள் எடுத்துக்காட்டியிருந்தனராயினும் 1800 பிற்பகுதியில் சேர் பிரான்சிஸ் கலட்டன் என்னும் ஆய்வாளரே மனிதகுலத்தவரின் குண இயல்புகள் கூட பிறப்பியல் அடிப்படையானவை எனக்கூறியிருந்தார். அவரது கூற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்ப குண இயல்புகள் பற்றிய ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன.

ஜீன் தொழில்நுட்ப நிபுணர்கள் தனி நபர்களின் குண இயல்புகளை ஜீன்களுடன் தொடர்புபடுத்துவதை ஆய்வின் கருப்பொருளாக வைத்து ஆய்வுகளை தீவிரப்படுத்தினர். சில குண இயல்புகள் அல்லது கோளாறுகள் (நோய்கள்) ஒரு தனி ஜீனுடன் தொடர்புபட்டிருக்கின்றதென்பதற்கு குருதிச்சோகை, நிறக்குருடு போன்ற நோய்களை உதாரணங்களாக எடுத்துக் கூறலாம்.

மனித பீற்றாகுளோபின் என்னும் புரதத்தில் சங்கேத பாஷைக் குறிப்பாக இருக்கும் (தனி) ஜீனின் கட்டமைப்பில் வேறுபாடு இருப்பதன் விளைவாகவே குருதிச்சோகை நோய் உருவாகிறது. அதேவேளை, ஒப்சின் என்னும் புரதத்தில் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்ட (தனி) ஜீன் இருப்பதாலேயே நிறக்குருடு நோய் உருவாகிறது.

இருப்பினும் இவ்வகை தனி ஜீனால் ஏற்படும் நோய்கள் மிகவும் மட்டானவை. மற்றைய பல நோய்கள் தோன்றுவதற்கு ஒன்று, இரண்டு அல்லது பல ஜீன்கள் தொடர்புபட்டிருக்கின்றன. இதனாலேயே பல ஜீன்களுடன் தொடர்புடைய குண இயல்புகள் ஆய்வாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது.

மேலும், ஜீன்களின் தொழிற்பாட்டில் இயற்கைச் சூழல் எவ்வகை செல்வாக்குச் செலுத்துகின்றதென்பதும் மர்மமாகவே இருக்கிறது. இருப்பினும் கட்டமைப்பில் வேறுபாடுள்ள ஜீன்கள் பற்றியும், ஜெனோம் வரிசையில் மாற்றங்கள் காணப்படுவது பற்றியும் ஆய்வு அறிக்கைகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இவை பிறப்புடன் அல்ல பரம்பரை நோய்களுடன் அல்லது வயதேறிய பின்பு உருவாகும் கற்றாக்ட், நீரிழிவு, குருதி அமுக்கம் மற்றும் மூப்படைதல் முதலிய நோய்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வகை ஆய்வுகள் டி.என்.ஏ. தொழில்நுட்பத்தை வெகுவாக முன்னேற்றமடையச் செய்திருக்கின்றன.

முதலாவது 35,000 எண்ணிக்கையான ஜீன்களைக் கொண்ட ஜெனோமின் சங்கேத பாஷைகளைப் புரிந்து அவற்றை வாசித்தலை சாத்தியமாக்கியிருக்கிறது. இரண்டாவது ரோபோட்டிக்ஸ்ஸை பயன்படுத்தி நுணுக்குக் காட்டி கண்ணாடித் தட்டில் பெருவாரியான ஜீன்களை ஒழுங்காக அடுக்கி வைத்தல் சுலபமாகியிருக்கிறது. இத்துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்திவரும் அவிமேற்றிக்ஸ் கம்பனி குறுகிய அல்லது நீளமான டி.என்.ஏ. மூலக் கூறுகளை ஒரு சிறு கண்ணாடித் தட்டில் ஒழுங்காக அடுக்கிவைத்து, 35,000 மனித ஜீன்களில் நோயை உருவாக்குதலுடன் தொடர்புபட்ட ஜீன் எதுவென தெரிவு செய்து கண்டுபிடித்தலை சாத்தியமாக்கியிருக்கிறது.

ஐ.என்.எஸ்.ஜி2, எம்.சி.4ஆர், வெப்டின், குரோமோசோம்3, முதலிய ஜீன்களில் மூலக்கூற்று வரிசையில் குறைபாடு இருப்பதால் மனிதரில் ஊளைச்சதை பிடிக்கும் ஆபத்து உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, இக்கோளாறு பிறவியில் ஏற்பட்டதல்ல வளர்ந்த பின்பு ஏற்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இங்கு ஒரு ஜீன் மட்டுமல்ல, பல ஜீன்கள் பங்கேற்கின்றன.

ஒரு தொகுதி அணுசேபதாக்கங்கள், தேக அப்பியாசம், உண்ணும் உணவு வகை, மருந்துவகை பாவனை போன்ற வாழ்க்கை நடைமுறைப் பழக்கவழக்கங்களின் மார்க்கத்தை சரிப்படுத்துவதுடன், நோய்கள் உருவாவதையும் சாத்தியமாக்குகிறது. எங்களில் பலர் பாட்டன் காலத்தில் இருந்ததை விட கூடிய ஊழைச்சதையுடன் இருப்பதையும் அவர்கள் காலத்தில் இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை விட தற்போது அதிகளவு நோயாளிகள் இருப்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். இவ்வகை கோளாறுகளுடன் தொடர்புபட்ட புதிய ஜீன் கண்டுபிடிப்பு, எங்கள் அனுசேபதாக்கத்தில் எங்கு பிழை நடந்திருக்கிறது என்னும் துப்பை துலக்குவதுடன் அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதையும் தெரிவிக்கும் இந்த ஜீன் ஆய்வுகளால், நாம் பெற்ற அனுபவங்கள் நமக்கு நன்மை பயக்க வேண்டுமாயின், இப்போதிருந்தே நமது மனதைக் கட்டுப்படுத்தி, எமது பழக்க வழக்கங்களை நல் மார்க்கத்தில் திசை திருப்ப வேண்டும்.

இதற்கு உதாரணமாக இளமைத் துஷ்பிரயோகம் ஜீன்களின் தொழிற்பாட்டை எவ்வாறு மாற்றமடையச் செய்கின்றன என்னும் விபரத்தை கிங்ஸ் கல்லூரி லண்டனைச் சேர்ந்த அவ்சலாம்கப்ஸி பிற்றபரோ பல்கலைக்கழக பேராசிரியர் அகமட் ஹறாறி மேரிலாந்தைச் சேர்ந்த அன்ட்றீஸ் மேயர் லன்டன் பேர்க் என்பவர்கள் அண்மையில் கண்டறிந்து தெரிவித்துள்ளார்கள்.

சில குறிப்பிட்ட ஜீன்களின் அளவு, முதலில் மூளையைப் பாதித்து, பின்பு அவரது உள நிலையைப் பாதிக்கிறது. பாதிப்படைந்த நபர்களில் ஜீன்களில் மூலக்கூற்று வரிசையில் மாற்றம், அவரது உணர்ச்சி வெளிப்பாடு, வன்செயல்கள் முதலியவற்றுடன் தொடர்பு பட்டிருப்பதை மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதனது போஷாக்கு பிற்காலத்தில் ஜீன் நடத்தைகளைக் கட்டுப்படுத்துகின்றதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எவ்வகைத் தொழிற்பாடு ஜீனின் தொழிற்பாட்டைச் சுண்டிவிடுகின்றது? என்பது போன்ற வினாக்களுக்கு இன்னமும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த ஆய்வுகள் குடும்ப, சமுதாய நிகழ்வுகள் எவ்வாறு தனிமனித நடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை எமக்கு விளக்குகின்றன.

ஜாதி குல பேதங்களும், சிறுவர் துஷ்பிரயோகமும், மனித சமுதாய நீதி நெறிக்கு அப்பாற்பட்டவை மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதும் கூட என்பதையும் தெரிவிக்கிறது. ஜீன் தொழில்நுட்பம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக்கூறுகிறது.

- நன்றி THE HINDU-

கோபத்தை ஏற்படுத்தும் மரபணு!

அளவுக்கு அதிகமாக கோபத்தை ஏற்படுத்தும் மரபணு:
அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு.

சிலருக்கு சில விஷயங் களில் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு ஒருவித மரபணுதான் காரணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண்முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். அதே விஷயத்தில் வேறு சிலர் நிதானத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இது ஏன் என்பது குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மானக் என்ற டாக்டர் ஆய்வு நடத்தினார். 531 பேரிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் சிலருக்கு மூக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார்.

மூளை செல்களில் செரோட்டோனின் என்ற ரசயான திரவம் உள்ளது. இந்த திரவம்தான் மரபணுவின் செயல்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு செயல்பாட்டின் மாறுதல்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. பெரியவர்களாக வளர்ந்ததும் இந்த மாற்றம் கோபத்தை கட்டுப் படுத்துவதையும் வெளிப்படுத்துவதையும் நிர்ணயிக்கிறது. பெரும்பாலும் ஆண்களிடம்தான் இந்த மரபணு மாற்றம் காணப்படுகிறது.

ஏற்கனவே இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகள் எம்.ஏ.ஓ.ஏ. என்ற மரபணுதான் இந்த கோபத்துக்கு காரணம் என்று தெரிவித்து இருந்தன.

நன்றி
http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&

கருங்குழி (Black Hole)

கருங்குழிகள் (Black Hole) என்பன, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எதையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது.

இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி விண்மீன்கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வளிமங்களைக் கவர்ந்து இழுக்கின்றன. இவ் வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது.

ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புச் சக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவொன்றை 1783 ஆம் ஆண்டில் தொழில்சாராப் பிரித்தானிய வானியலாளரான வண. ஜான் மிச்சேல் (John Michell) என்பவர் முன்வைத்தார். 1795 இல் பிரெஞ்சு இயற்பியலாளர் பியரே-சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) என்பவரும் இது போன்ற முடிவொன்றை வெளியிட்டார். இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கருங்குழி பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது. போதிய அளவு பெரிதான ஒரு திணிவு போதிய அளவு சிறிதான வெளிப் பகுதி ஒன்றில் இருக்கும்போது சூழவுள்ள வெளி உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்தப் பொருளும் கதிர்வீச்சும் தப்பி வெளியேறாதபடி தடுத்துவிடும்.

பொதுச் சார்புத் தத்துவம் கருங்குழியை, மையத்தில் புள்ளி போன்ற சிறப்பொருமையுடன் (singularity) கூடிய வெறுமையான வெளியாகவும், அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் விபரிக்கும் அதே வேளை, குவாண்டம் பொறிமுறையின் தாக்கங்களைக் கருதும்போது இதன் விளக்கம் மாறுகின்றது. கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஹோக்கிங் கதிர்வீச்சு எனப்படுகின்றது.

Simulated view of a black hole in front of the Milky Way. The hole has 10 solar masses and is viewed from a distance of 600 km.பால் வீதியில் கருங்குழியின் உருப்போலியான தோற்றம். இக்குழி பத்து சூரிய தினிவுகளை கொண்டது. 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோக்கப்பட்டது

கருங்குழியில் இருந்து தப்ப முடியாதது ஏன்?

இது குறித்த பொதுவான விளக்கங்கள் விடுபடு திசைவேகம் என்னும் கருத்துருவின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகின்றன. விடுபடு திசைவேகம் என்பது ஒரு பெரிய பொருளொன்றின் மேற்பரப்பில் இருந்து புறப்படும் ஒரு கலம் அப்பொருளின் ஈர்ப்புப் புலத்தை முழுமையாகக் கடப்பதற்குத் தேவையான வேகம் ஆகும். நியூட்டனின் ஈர்ப்பு விதியின்படி பொருளின் ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது அதாவது பொருளின் அடர்த்தி அதிகரிக்கும்போது விடுபடு திசைவேகமும் அதிகரித்துச் செல்லும். இவ்விசை ஒரு குறிப்பிட்ட அளவை அடையும்போது விடுபடு திசைவேகம் ஒளியின் வேகத்துக்குச் சமமாகவோ அல்லது அதனிலும் கூடுதலாகவோ ஆகக்கூடும். ஒளியின் வேகத்துக்கு மிஞ்சிய வேகம் எதுவும் இல்லை என்பதைக் காட்டி, அத்தகைய அடர்த்தி கொண்ட பொருளிலிருந்து எப்பொருளும் தப்பமுடியாது என்னும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. இந்த விளக்கத்தில் ஒரு தவறு உள்ளது. இது ஒளி ஏன் ஈர்க்கும் பொருளினால் பாதிக்கப்படுகிறது என்பதையோ அது ஏன் தப்பமுடியாது என்பதையோ விளக்கவில்லை.

இத்தோற்றப்பாட்டை விளக்குவதற்கு ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய இரண்டு கருத்துருக்கள் தேவைப்படுகின்றன. முதலாவது, வெளியும் நேரமும் தனித்தனியான இரண்டு கருத்துருக்கள் அல்ல, அவை வெளிநேரம் என்னும் ஒரே தொடர்பத்தை உருவாக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பானவை ஆகும். இந்தத் தொடர்பம் சில சிறப்பு இயல்புகளைக் கொண்டுள்ளது. ஒரு பொருள் தான் விரும்பியபடி வெளிநேரத்தில் நகர முடியாது. அது எப்பொழுதும் நேரத்தில் முன்னோக்கியே நகர முடியும். அத்துடன், அப்பொருள் தனது நிலையை ஒளி வேகத்திலும் வேகமாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. இதுவே சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் முக்கியமான விளைவு.

இரண்டாவது கருத்துருவே பொதுச் சார்புக் கோட்பாட்டின் அடிப்படை: திணிவு, வெளிநேரத்தின் அமைப்பை உருமாற்றுகிறது. வெளிநேரத்தில் திணிவின் தாக்கத்தை, நேரத்தின் திசையை திணிவு நோக்கிச் சாய்த்தல் எனப் பொதுவாகக் கூறலாம். இதனால் பொருள்கள் திணிவை நோக்கி நகர்கின்றன. இது ஈர்ப்பாக உணரப்படுகிறது. திணிவுக்கும் பொருளுக்கும் இடையிலான தூரம் குறையும்போது நேரத்தின் திசையின் சாய்தலும் அதிகரிக்கும். திணிவுக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இச் சாய்வு மிகவும் வலுவடைந்து, இயலக்கூடிய எல்லாப் பாதைகளுமே திணிவை நோக்கியே செல்லும். இப் புள்ளியைக் கடக்கும் எந்தப் பொருளும் அத்திணிவில் இருந்து விலகிச் செல்வது முடியாது. இப் புள்ளியே நிகழ்வெல்லை எனப்படும்.

தகவல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Sunday, July 12, 2009

தமிழ் மொழியின் வரலாறு



ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????
இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
நன்றி:
pkp.blogspot.com

Wednesday, July 8, 2009

சார்லஸ் டார்வின்

ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம்.

சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தாய்வழியில் இன்றளவும் புகழ்பெற்ற வெட்ஜ்வுட் என்ற சீன முறை பீங்கான் பாத்திரங்களையும் கலைப்பொருட்களையும் தயாரிக்கும் குடும்பம். தந்தை எராஸ்மஸ் டார்வின் அந்த நாட்களில் பிரிட்டனின் முதல்தர அறிஞர்களுள் ஒருவராக அறியப்பட்டவர். முதலில் மருத்தவம் பயில ஆசைகொண்ட டார்வின் ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் கிறிஸ்தவ மதபோதகராக மாற கேம்ப்ரிட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்த நாட்களில் கிறிஸ்துவத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றைத் தன் கண்டுபிடிப்புகள் தகர்க்கப் போகின்றன என்று அறிந்திருக்கமாட்டார்.

கேம்ப்ரிட்ஜில் இயற்கை வேதாந்தம் (Natural Theology) என்ற பாடத்தைப் படிக்க நேர்ந்தார். அப்பொழுது ஜான் ஹெர்ஷெல் (John Herschel) என்பவரின் புத்தகம் ஒன்றைப் படித்தார். அதில் “சுற்றிலும் இருப்பவற்றைக் கூர்ந்து நோக்குதலில் வழியே இயற்கையின் நடைமுறை விதிகளை அறிந்து கொள்வதே இயல் தத்துவத்தின் (Natural Philosophy) உச்சம்” என்ற ஹெர்ஷல் விளக்கம் டார்வினை மிகவும் ஈர்த்தது. கூடவே ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஃபன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்ற மேதையின் பயணங்களின் வழியே உலகையும் இயற்கையையும் புரிந்துகொள்ளும் உன்னதத்தைப் பற்றிய விளக்கம் சேர்ந்துகொள்ள நெடும் பயணம் ஒன்றை மேற்கொண்டு அதனூடாக இயற்கை விதிகளை ஆய்வதில் டார்வினுக்கு ஆர்வம் பெருகியது.

1831-ல் ஹெச்.எம்.எஸ் பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில் இங்கிலாந்தில் தொடங்கி, தென்னமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியாக தென்கோடியில் இருக்கும் ஃபால்க்லண்ட் என்ற தீவிற்குச் சென்றார். அங்கிருந்து மேற்குக் கடற்கரை வழியாக தென்னமெரிக்காவின் வட மேற்கில் இருக்கும் கலாபகஸ் என்ற தீவுக்கூட்டத்தில் பல நாட்கள் தங்கினார். அங்கிருக்கும் பறவைகளையும் விலங்கினங்களையும் தாவரங்களையும் அவர் இதுவரை வேறெங்கும் கண்டதில்லை. தனித் தீவுக்கூட்டத்தில் தனிமை வாய்ந்த உயிரினங்கள் எப்படி வந்தன, அவை ஏன் அங்கே நன்றாகச் செழித்து வளர்கின்றன என்று அவருக்குத் தோன்றிய கேள்விதான் நாம் இன்றைக்கு பூமியில் உயிரிகளின் தோற்றமும் வளர்ச்சியும் மாற்றமும் குறித்த புரிதல்களுக்கு வழிகாட்டுகின்றன. தொடர்ந்து ஆஸ்திரேலியா வழியாக மீண்டும் இங்கிலாந்தை ஹெச் எம் எஸ் பீகிள் 1836 ஆம் ஆண்டு வந்தடைந்தது.

தன் கடற்பயணத்தின்போது சேகரித்த தகவல்கள், தரவுகள், பயணக்குறிப்புகள் இவற்றின் மீது கிடத்தட்ட இருபது வருடங்கள் தொடர்ச்சியான ஆய்வை மேற்கொண்டார் டார்வின். தொடர்ந்து அவர் எழுதிய On the Origin or Species by Means of Natural Selection என்ற புத்தகம் 1859-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அதில் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற அமைப்புகளைப் பெற்றிருக்கும் உயிரினங்கள் அவ்வாறு ஏற்பில்லாத உயிரினங்களைக் காட்டிலும் எளிதில் எப்படி ஜீவிக்க முடிகிறது என்று விளக்கினார். வலுவற்றவை தங்காமல் அழிந்துபோக வலுவுள்ளவற்றின் சந்ததி எளிதில் பெருகிறது.

சந்ததிப் பெருக்கத்தில் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு வேறு குணங்களைக் கொண்ட ஒரு புதிய உயிரி பிறந்தால் அது சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் பட்சத்தில் நன்கு வளர்ந்து தன் குணங்களைக் கொண்ட சந்ததியைப் பெருக்குகிறது. இதுவே தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் புதுப்புது உயிரினங்கள் தோன்ற வழிவகுக்கிறது.

டார்வினின் இந்தக் கோட்பாடு அந்த நாட்களில் (ஏன் இன்றுகூட) பலத்த சர்ச்சைக்குள்ளானது. கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆதி கடவுள் இந்த உலகை ஏழு நாட்களில் படைத்தார். ஆனால் டார்வினின் பரிணாமக் கோட்பாடுகளின்படி உயிரியலில் மேல்நிலையிலுள்ளவை அவற்றின் கீழிருக்கும் உயிரினங்களில் ஏற்பட்ட தற்செயலான மாறுதல்களால் படிப்படியாக வளர்ந்து உருவானவை. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு கிட்டத்தட்ட நூற்றைம்பது வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நூற்றைம்பது வருடக் கேள்விகளும் ஆய்வுகளும் அதற்கு மேலும் வலுவைத்தான் சேர்த்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் உயிரிகளில் மரபைத் தாங்கி இனப்பெருக்கத்தின்போது அதை முன்னெடுத்துச் செல்லும் டி.என்.ஏ-வின் அமைப்பும் செயற்பாடும் புரிந்துகொள்ளப்பட்டது. இப்பொழுது உயர்நுட்ப மரபியல் ஆய்வுகளின் வழியே மூலக்கூறு அளவில் துல்லியமாகப் பரிணாமம் எப்படி செயற்படுகிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது. குரங்குக்கும் மனிதனுக்கும் ஒற்றைக் குரோமோசோமின் இழைவழியே இருக்கும் மாறுபாட்டைக் கடந்த சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்திருகிறார்கள்.

டார்வின் வாழ்ந்த காலத்தில் மரபணுக்களைப் பற்றிய அறிவு கிடையாது, டி.என்.ஏ, குரோமோசோம் இவற்றைப் பற்றித் தெரியாது. இன்றைக்கு அவர் வாழ்ந்திருந்தால் தன் கண்டுபிடிப்புகள் துல்லியமான சோதனைகளில் நிரூபணமாவதைக் கண்டு மகிழ்வார் என்பது நிச்சயம். டார்வினின் அறிவியல் முறை தனித்தன்மையாது. மலையுச்சியில் நின்று கடற்கரைப் பெரும்பரப்பை அவர் கண்டார். அங்கிருந்த ஒவ்வொரு செடி, கொடி, விலங்கு, மீன், தொடங்கி அங்கே கிடைக்கும் கனிமங்கள், பெய்யும் மழையளவு, மாறும் காலநிலை, பிற நிலங்களுக்கும் அதற்கும் இருக்கும் மாறுபாடுகள் இவற்றைத் துல்லியாம ஆராய்ந்தார். அப்பொழுதும் அவரால் முழு பெருநிலப்பரப்பின் பெரும நிலையையும் தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.

ஒற்றை மணற் துகளில் உலகத்தைக் காணும் தனித்திறன்தான் டார்வினை இருநூறு வருடங்களுக்குப் பிறகும் நாம் கொண்டாட முக்கிய காரணம்.

ஜோதிடம் உண்மை(?) என்ன?

இன்று பல மக்களாலும் பல தேவைகளுக்காகவும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து இறக்கும் வரைக்கும் ஜோதிடம் பார்க்கப் படுகிறது. இதனால் எத்தனையோ பேரின் வாழ்க்கை வீணாய் போயிருக்கிறது. ஏழிலை செவ்வாய்,எட்டிலை சனி என்று எத்தனையோ பேர் ஜோதிடத்தை நம்பி திருமணம் செய்யமல் இருக்கிறார்கள். வாழவேண்டிய வயதில் எத்தனையோ பேர் முதிர் கன்னிகளாக இருக்கிறார்கள். ஜோதிடத்தை நம்பி,சகுனம் பார்த்து வருத்தத்திற்கு மருந்து வாங்க கூட நாள் பார்க்கிறார்கள் பொன்னான பொழுதுகளை வீணாக்குகிறார்களே இது ஏன்? ஜோதிடம் உண்மைதானா? ஜோதிடம்அதிலும் பலவகையாக.... தினசரி பலன்,மாத,வருட பலன், கைரேகை,கிளி ஜோதிடம்,எண்சாத்திரம்,குறிப்பு,வாக்கு சொல்லுதல் போன்றவையாகும்.ஆனால் இவையெல்லாம் உண்மைதானா அல்லது வியாபார நோக்கில் மக்களை ஏமாற்றி செயற்படுகிறார்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஜோதிடம் என்ன என்பதை பற்றி சிந்தித்து பார்ப்போமா?

உதாரணமாக சிலர் தினப்பலன்களை பார்க்கிறார்கள்,அதில் சிவப்பு சட்டை போடணும் என்றால் போடுகிறார்கள். உண்மையில் தினப்பலன் என்றால் என்ன சரிதானா என்று பார்ப்போமா?

தினப்பலன் ஒவ்வொரு ராசிக்கும் சந்திரனின் சஞ்சாரத்தை மட்டுமே வைத்துக்கணிக்கப்படுகிறது. அப்படியாயின் பன்னிரண்டு ராசியிலும் பல கோடிப்பேர் இருப்பினம். இவர்கள் ஒவ்வொருத்தருக்கும் சரிவருமா?

மற்றது கைரேகை பார்க்கிறார்கள். கைரேகை என்பது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஏற்படும் சுருக்கங்களே(கையை பொத்திவைத்திருப்பதால் ஏற்படுவது) இதை வைத்து எப்படி ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியும்? இதை நம்புவது முட்டாள் தனமில்லையா?

ஜோதிடத்திற்கு வருவோம். ஜோதிடம் என்பது ஒரு ஊகமே தவிர விஞ்ஞானம் அல்ல, ஆதாரம் இல்லாத எதையும் நம்பமுடியாது. அதனால் எனது கருத்து ஜோதிடம் என்பது பொய்மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதே. இதற்குரிய காரணங்கள்

1.ஜோதிடமானது பூமியை மையப்படுத்தி அதை ஜீவமையம் என்கிறது இது அடிப்படத்தவறு ஏனேன்றால் சூரியனை மையப்படுத்தித்தான் கோள்கள் சுற்றி வருகின்றனவே தவிர பூமியை மையப்படுத்தி அல்ல.

2.ஜோதிடத்தில் நவக்கிரகம் என்கிறார்களே அப்படிக்கிடையாது நவக்கிரகத்தில் யுரேனியம்,நெப்டியூனஸ்,புளூட்டோ கிடையாது ஏனென்றால் அவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் தான் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

3.சூரியனை கிரகம் என்கிறார்கள் இதுவும் தவறு அது ஒரு நட்சத்திரம்.4.சந்திரனையும் கிரகம் என்கிறார்கள் அதுவும் தப்பு. சந்திரன் ஒரு துணைக்கோள்.

5.ராகு,கேதுவை சாயாகிரகம் என்கிறார்கள் அதாவது நிழல் கிரகம் அப்படியென்றால் நிழலுக்கு பயப்பட வேண்டுமா?

6.பிறந்தநேரம் பார்ப்பார்கள். நான் சொல்றேன் பிறந்தநேரம் கூட உண்மை கிடையாது. ஒரு தாய்க்கு பிரசவ வலி வந்தபின் பத்து படிநிலைகளைத்தாண்டித்தான் குழந்தை வெளியே வரும்.அப்ப குழந்தை வெளியே வரும் போது தலை சுற்றி குழந்தையை வெளியே எடுப்போம் பின் தொப்புள் கொடியை வெட்டுவார்கள், பின் துடைப்பர்கள் அதுக்கு பிறகு ரோக்கன் கட்டுவார்கள்,பின் அம்மாவிடம் தாய்ப்பால் குடிக்குமா என பார்ப்பார்கள்.

ஒரு வைத்தியசாலையில் ஒரு இரவு எத்தனை குழந்தை பிறக்கும் தெரியுமா? உதாரணத்துக்கு பத்து குழந்தை பிறந்தால் இந்த பத்து பிரசவத்திற்கும் திடீரென emergency cisarian system இல் தூக்கிப் போட்டுத்தான் குழந்தையை வெளியே எடுப்போம். அதுக்குப்பிறகு ஒரு தேனீர் ஏதும் குடித்திட்டு வந்துதான் குழந்தைகளின் நேரத்தை கணிப்பார்கள். இதையா பார்க்கிறீர்கள். அதைவிட உள்ளூர் நேரம்,சர்வதேச நேரம் இருக்கு பெரிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நேரம் அப்படியெனில் அடிப்படைக்கருத்தே பொய்யல்லவா?

சுவாமி விவேகானந்தர் சொன்னார் ஒரு மனிதனுடைய பலவீனத்தை தான் ஜோதிடம் மீது வைக்கும் நம்பிக்ககையை சொல்கிறார் தொடர்ந்து சொல்கிறார் தயவு செய்து ஓய்வெடுங்கள் ,தூங்குங்கள், வைத்தியரை பாருங்கள் என்று.

அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா? ஜோதிடம் பார்த்த மன்னன் போர்க்களம் போனானா? ஜோதிடம் பார்த்தே செத்துப்பொடுவன் என்று சொல்லி இருக்கிறார்.

புத்தர் ,சாந்தி,சடங்கு,நேரம்,நட்சத்திரம் பார்த்தால் வாழ்க்கை உருப்படாது அழிந்துபோகும் என்றார்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுண்பொருள் காண்பது அறிவு

அறிவை மட்டுமே நம்புவோம்.

கடிகாரம்

நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான "wrist" என்பது தமிழில் "மணிக்கட்டு" என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.

நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது.

காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.

கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன. அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன. தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன.

உலக தினங்களின் பட்டியல்

பிப்ரவரி 14, காதலர் தினம்‌
பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்

மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்

மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்

நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

பிளாஸ்டிக் விளக்கம்

பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு "எளிதாக அச்சில் வார்க்கக்கூடியது" எனப் பொருள். பிளாஸ்டிக் 1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது. செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன. குறைந்த எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத தன்மை போன்றவற்றால் பிளாஸ்டிக் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு இன்று உலகில் பல்கிப் பெருகி விட்டதால், இக்காலத்தை பிளாஸ்டிக் ஊழி என்றால் அதில் மிகையேதுமில்லை. சிறு பொம்மைகளிலிருந்து மிகப் பெரிய தொழிலகங்களில் பயன்படும் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்கள் பிளாஸ்டிக்கைக் கொண்டு செய்யப்படுகின்றன. மருத்துவத் துறையிலும் இதன் பயன்பாடு மிக அதிகம்.

தற்காலத்தில் பிளாஸ்டிக் என்பது, அச்சில் வார்த்து வெப்பம் மற்றும் அழுத்தத்தைக் கொண்டு பல்வகை வடிவங்களிலான பொருட்களைத் தயாரிக்கும் பிசுபிசுப்புத் தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது. இதற்குச் சாயம் பூசி பல்வேறு நிறங்களையும் அளிக்க முடியும். உலோகத்துடன் ஒப்பிடும் போது பிளாஸ்டிக் குறைந்த எடை கொண்டது; காற்று மற்றும் நீரால் பாழாகாது; துருப்பிடிக்காதது. நெருப்பினால் அழியாத ஒரு வகைப் பிளாஸ்டிக்கும் கூட வந்துவிட்டது. சில பிளாஸ்டிக்குகள் கண்ணாடி போன்று நெகிழ்ச்சியுடையவை; பட்டு போன்று மென்மையானவை; எஃகு போன்று உறுதியானவை. பல்வகைப் பண்புக் கூறுகளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக்குகள் உள்ளன. இவற்றின் தனிச் சிறப்புகள் காரணமாக மின்சாரத் துறைசார்ந்த பொருட்களிலும் கூடப் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் வகைகள்:

அறிவியல் முறையில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பல்வகைப்படும். சில வகைகள் பின் வருமாறு: பினோலிக், அமினோ, செல்லுலோசிக், பாலிமைட், பாலியஸ்டர், ஆல்கைட், புரோட்டின், இன்ன பிற.

பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம் செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப் பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும், அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன. இதில் அடங்கியுள்ள செயல்முறை பின்வருமாறு: முதலில் பிளாஸ்டிக் துகள்கள் ஒரு வார்ப்பட அச்சில் அடைக்கப்படுகின்றன; பின்னர் சூடுபடுத்தப்பட்டு அழுத்தப் பெறும்; குறிபிட்ட நேரத்திற்குப் பின்னர் தேவையான பிளாஸ்டிக் தயாராகி விடும். தற்போது எந்திரங்களைக் கொண்டு இச்செயல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பினோலிக் பிளாஸ்டிக்:

பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு மின்சாரச் சுவிட்சுகள், பிளக்குகள், உருக்கிகள், ஹோல்டர்கள், தொலைபேசிக் கருவிகள், வானொலிப் பெட்டிகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனைக் காகிதம் அல்லது துணி போன்ற நார்ப் பொருட்களுடன் கலந்து, பல்வேறு பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பினோலிக் பிளாஸ்டிக்கின் மெல்லிய படலத்தைப் பரந்த துணி அல்லது காகித்தத்தில் பரப்பி மேசை விரிப்புகள், இருக்கை விரிப்புகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு பெட்டிகள், புத்தக அலமாரிகள், விமானம், ரயில் போன்றவற்றின் உட்பகுதிப் பாகங்கள் எனப் பலவகைப் பொருட்களும் செய்யப்படுகின்றன. பொறியியல் பகுதிகளான சக்கரங்கள், பற்சக்கரங்கள் போன்றவையும் பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுகின்றன. சுமார் 15-20% மரத்தூளை பினோலிக் பிளாஸ்டிக்குடன் கலந்து மரப்பலகைகளைப் போன்றே பிளாஸ்டிக் பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன. பிளைவுட் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

அமினோ பிளாஸ்டிக்:

அமினோ பிளாஸ்டிக்கில் "யூரியா" மற்றும் "மெலாமைன்" வகைகள் மிக முக்கியமானவை. யூரியா பிளாஸ்டிக் மிகவும் உறுதியானது; தனது வடிவத்தை இழக்காது; இது சுவையற்றது, மணமற்றது, எந்த நிறத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இப்பண்புகள் காரணமாக, வானொலிப் பெட்டிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், சுவர்க் கடிகாரங்கள், பொத்தான்கள், சமையலறைப் பாத்திரங்கள் போன்ற பலவற்றையும் செய்வதற்கு இது மிகவும் பயன்படுகிறது. மெலாமைன் பிளாஸ்டிக்கும், யூரியா பிளாஸ்டிக்கின் பண்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. இது தண்ணீர், வெப்பம் ஆகியவற்றைத் தாங்கும் வலிமை கொண்டது. எனவே, மின்சாதனங்களின் தயாரிப்புக்கு இது மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

செல்லுலோசிக்:

செல்லுலோசிக் பிளாஸ்டிக் தீயில் உருகிவிடும் தன்மையுடையது. வெப்பத்தில் நீர் போன்று உருகி, ஆறவைத்தால் மீண்டும் உறுதியாகிவிடக் கூடியது. எனவே இதிலிருந்து மீண்டும், மீண்டும் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். விரிப்புகள், உருளைகள், குழாய்கள் வடிவத்தில் செல்லுலோஸ் நைட்ரேட் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. விரிப்பு, உருளை, குழாய்களை வேண்டிய அளவில் துண்டித்து இணைக்கவும் முடியும். பேனா, மூக்குக் கண்ணாடிச் சட்டங்கள் ஆகியன இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை. ஒளிப்படப் பிலிம்கள், வாகனங்களுக்கான வார்னிஷ், செயற்கைத் தோல் போன்றவையும் செல்லுலோஸ் நைட்ரேட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன.

செல்லுலோஸ் அசிடேட்:

இதுவும் செல்லுலோஸ் நைட்ரேட் போன்றதே எனினும், இது வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டதாகும். செல்லுலோஸ் அசிடேட் பிளாஸ்டிக் துகள்களிலிருந்து, படிவ அச்சுகளைப் பயன்படுத்தி, பல்வேறு பொருட்களைத் தயாரிக்க இயலும். தண்டுகள், குழாய்கள், விரிப்புகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மெல்லிய பிலிம்களையும் தயாரிக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பிலிம்களை ட முதல் 1/8000 செ.மீ. தடிமன் அளவுக்கும் கூட தயாரிக்கக்கூடும். எக்ஸ் கதிர் பிலிம்களையும் தயாரிக்க இயலும். அசிட்டேட் ரேயான் இழைகளும் இதைக்கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றன.

எதனாய்ட்:

இந்த வகையில் முக்கியமான பிளாஸ்டிக்குகளாக விளங்குபவை பாலிஸ்டெரின், பாலிவினைல் கலவை, பாலி மீதைல் மெதாக்ரைலேட் மற்றும் பாலிதைலேன் ஆகியனவாகும். பாலிஸ்டெரின் வகை நிறமற்றதும், பளிங்குபோல் காட்சியளிப்பதுமாகும். இதில் தேவையான வண்ணத்தைப் பூசலாம். பலவகைப் பொம்மைகள், மின்கல உறைகள், பெனிசிலின் சிரிஞ்சுகள் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. இதன் விலையும் குறைவு.

பாலிவினைல் குளோரைட் (பிவிசி):

வினைல் பிளாஸ்டிக்குகள் வகையில் இது மிக முக்கியமான ஒன்றாகும். மின்செப்புக் கம்பிகளைச் சுற்றும் உறையாக இது பயன்படுத்தப்படுகிறது. வாகன இருக்கைகள், மழைக்கால உடைகள், தரை விரிப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பல வடிவங்களிலும், கவர்ச்சியான வண்ணங்களிலும் இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமபோன் இசைத்தட்டுகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. இதனைக் கொண்டு உருவாக்கப்பட்ட காலணியின் அடிப்பாகம், தோலால் உருவாக்கப்பட்டதை விட வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது. வினைல் பிளாஸ்டிக்கைக் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள் தோலால் செய்யப்பட்டவை போல் இருக்கும்; இதனைக் கலந்து உருவாக்கிய காகிதம், அட்டைப் பெட்டி செய்யப் பயன்படுகிறது. எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் இது ஈரமாவதில்லை.

செயற்கைப் பற்கள் மற்றும் கண்கள்:

பாலி மீதைல் மெதாக்ரைலேட் எனும் பிளாஸ்டிக் மிகவும் லேசானது; தெள்ளத் தெளிவானது; பிளாஸ்டிக் தடிகள், குழாய்கள், விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுவது. இவ்வகைப் பிளாஸ்டிக்கில் வண்ணங்களைக் கலந்து இருளில் ஒளிரும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விமானச் சாளரங்கள், இருக்கைகள், மூக்குக் கண்ணாடி வில்லைகள், மருத்துவக் கருவிகள், செயற்கைப் பற்கள், செயற்கைக் கண்கள் ஆகியன தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

பாலி எதிலின்:

பாலி எதிலின் என்பது பிளாஸ்டிக்கின் அண்மைக்கால வளர்ச்சியாகும். இது பிளாஸ்டிக் துகள்கள், பிலிம்கள், விரிப்புகள், குழாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவதாகும். மின் கருவிகள் தயாரிப்பிலும், உணவுப் பொருட்களைப் பொட்டலங்களாகக் கட்டுவதற்கும் இது பயன்படுகிறது.

நைலான் பொருட்கள்:

நைலான் என்பது பாலிமைட் பிசின் வகையைச் சார்ந்தது; இழைகள், துகள்கள், விரிப்புகள், குழாய்கள், கயிறு, நூல் ஆகிய வகைகளில் இது கிடைக்கிறது. நைலான் மிகவும் வலிமையானது; வேதிப் பொருட்கள் சேர்க்கையால் சேதமடையாதது.

ஆல்கைட்:

ஆல்கைட்கள் வண்ணப் பூச்சு வார்னிஷ்களில் பயன்படுவன; தண்ணீரால் அழியாதவை. பொத்தான்கள், தைக்கும் ஊசிகள், பேனா, நாகரிகப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன.

நன்றி:உணர்வுகள்

Tuesday, July 7, 2009

அகிலத்தின் இறுதி முடிவு என்ன?

ஆராய்ச்சி கட்டுரை திரு.ஜெயபாரதன்

பெரு வெடிப்புப் பிரபஞ்சத்தின்
அறியா முடிவைப்
பொறிக்கப் போவது
துரிதப்படுத்தும் கருமைச் சக்தி !
உதைத்துத் தள்ளும்
அகிலத்தை
ஒடுக்குமா அல்லது மேலும்
முடுக்குமா ?
ஒளிமந்தைகளை
கவர்ச்சி விசைக்கு எதிராய்
இழுத்துச் செல்கிறது
விலக்கு விசை
காலவெளிக் கருங்கடலில் !
கடவுளின் குதிரைச் சக்தி
கருமைச் சக்தி !
காலக் குதிரை
பின்னோக்கிச் செல்லாது !
பிரபஞ்சத்தின் முடிவு
வெப்ப மரணம் ! அல்லது
பெருங் குளிர்ச்சி !
பெருங் சுருக்கம் ! அல்லது
பெரும் முறிவு !
ஒழுங்கீனச் செறிவு !

Fig. 1
The End of the Universe

"எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் முடிவடையும் என்பதை ஆராய்ந்தறிய விஞ்ஞானிகள் எவற்றால் பிரபஞ்சம் உருவாக்கப் பட்டது என்று முதலில் அறிய வேண்டும்."

ஜேம்ஸ் டிரி·பில் பேராசிரியர் (James Trefil) (George Mason University)

"வெப்ப இயக்கவியல் பௌதிகத்தின் இரண்டாம் விதி (The Second Law of Thermodynamics) பிரபஞ்சத்துக்கு "வெப்ப மரணம்" அல்லது "ஒழுங்கீனச் செறிவு" (Heat Death or Entropy Death) என்னும் முடிவைத் தவிர வேறெதுவும் இல்லை என்று முன்னறிவிக்கிறது. அந்த நிலையில் உயிரனங்கள் எதுவும் பிழைத்திருக்க முடியாதபடி உஷ்ணம் மிகக் கீழாகத் தணிந்து விடும்."

ஸர் ஜீன்ஸ் ஜேம்ஸ் ஆங்கிலப் பௌதிக, வானியல் விஞ்ஞானி (1877-1946)

நமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச "வெப்ப இழப்பு" (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது. அதாவது சிறுகச் சிறுக விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் முடிவிலே அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும். விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒரு காலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.

டாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)

Fig. 1A
The Big Bang Beginning

1998 ஆண்டுக்கு முன்னால் "கருமைச் சக்தி" என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை ! கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியை உந்த வைக்கிறது. அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.

கிரிஸ்டொ·பர் கன்ஸிலிஸ் (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)

பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது ! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது ! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

அமெரிக்க வானியல் மேதை எட்வின் ஹப்பிள்

Fig. 1B
The Evolution of the Cosmos

பிரபஞ்சத்தின் முடிவு இறுதியில் என்னதாய் இருக்கும் ?
பிரபஞ்சத்தின் மரணம் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முதலில் பிரபஞ்ச வடிவங்கள் எப்படித் தோன்றின என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும் ! பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு விண்வெளி எப்படி இருந்தது என்றும் முன்பாக ஊகிக்க வேண்டும் ! பிறகு பிரபஞ்சம் சிதைந்தோ விரிந்தோ முறிந்தோ வெப்பம் குன்றியோ குளிர்ந்தோ அல்லது ஒடுங்கியோ போனால் என்ன நேரிடும் என்று ஊகிக்க வேண்டும் ! அதாவது பிரபஞ்சத்தின் பிறப்பு இறப்பு வளர்ப்பு போன்ற மூலாதார விளக்கங்களில் அநேகக் கருத்துக்கள் ஊகிப்பாக இருப்பனவே தவிர மெய்யான விஞ்ஞானமாக இன்னும் உருவாக வில்லை ! கடந்த நூறாண்டுகளாகத் தொலைநோக்கிகள், கதிரலை ரேடார்கள், விண்வெளிப் பயணங்கள், விண்ணுளவிகள் மூலமாகப் பிரபஞ்சத்தைப் பற்றி அறிந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வைத்துக் கொண்டு காலத்தை முன்னோக்கியும், பின்னோக்கியும் கோட்பாடுகள் ஊகிக்கப்பட்டும் மாறி மாறியும் வருகின்றன ! இந்த முறைகளைத் தவிர வேறு ஆய்வுப் பாதைகள் இல்லாததால் இவற்றைப் பின்பற்றி பிரபஞ்சத்தின் மரணம் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் வெவ்வேறு காட்சிகளை ஊகிக்கிறார்கள் !

Fig. 1C
The Fate of the Universe
தற்போது பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆகிவிட்டன என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தாலும் எப்போது பிரபஞ்சத்தின் மரணம் இருக்கலாம் என்று தீர்மானமாக யாரும் இதுவரை ஊகிக்க முடியவில்லை ! பிரபஞ்சத்தின் ஆயுள் அடிக்கோல் டிரில்லியன் (Trillions of Years 10^12) ஆண்டுக் கணக்கில் உள்ளது என்பது மட்டும் அறியப் பட்டுள்ளதால் யாரும் அஞ்ச வேண்டியதில்லை ! பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி ஓரளவு அறிந்த விஞ்ஞானிகளின் ஆர்வம் அதன் இறப்பைப் பற்றி உளவிட இப்போது திரும்பியுள்ளது. பிரபஞ்சத்தின் பிறப்பும் இறப்பும் பரிதியால் பூமியில் நிகழும் இரவு பகல் போல் மாறி மாறி வரும் ஒரு "சுற்றியக்கம்" (Cyclic Event) என்பது பல விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது ! விஞ்ஞானி ஜியார்ஜ் காமா ஊகித்த பிரபஞ்சப் "பெரு வெடிப்புக் கோட்பாட்டைப்" (The Big Bang Theory) பெரும்பான்மையான உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரு வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் கரும்பிண்டங்களைக் கொண்டு விண்மீன் ஒளிமந்தைகளை உருவாக்கி அதன் வடிவம் விரிவாகி வருகிறது. புதிதாக மறைமுகமாய்க் கண்டுபிடிக்கப் பட்ட "கருஞ்சக்தி" (Dark Energy) அண்டங்களின் கவர்ச்சி விசையான "ஈர்ப்புச் சக்திக்கு" எதிரான விலக்கு விசை என்பது அறியப்பட்டது ! அந்தக் கருஞ்சக்தியே காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாய் "விரைவாக்கம்" (Acceleration) செய்து வருகிறது என்பதும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.
Fig. 1D
The Time Machine
பிரபஞ்சத்தின் முடிவு இறுதியில் எப்படி யெல்லாம் இருக்கலாம் ? பிரபஞ்சத்தில் பரிதி போன்ற விண்மீன்களின் எரிசக்தி முற்றிலும் தீர்ந்து போய் "வெப்ப மரணம்" (Heat Death) ஏற்படலாம் ! விண்மீன்களின் கண்ணொளி மங்கிப்போய் செத்த மீன்களும், பிண்டச் சடலங்களும் கருந்துளைகளால் (Black Holes) உறிஞ்சி விழுங்கப் படலாம் ! செங்குள்ளி விண்மீன்கள் (Red Dwarf Stars) எரிந்து மெதுவாக மங்கிப் போகலாம் ! கருஞ்சக்தி துரிதமாய் உந்தித் தள்ளும் காலாக்ஸிகள் பயணம் செய்து கருஞ் சூனியக் கடலில் (Sea of Black Void) கரைந்து போகலாம் ! கருந்துளைகளின் வயிறு பெருத்து எரிசக்தி தீர்வதால் வெடித்துப் பிண்டங்கள் வெளியாக்கலாம் ! இறுதியில் "வெப்பத் தளர்ச்சியால்" (ஒழுங்கீனச் செறிவால்) (Entropy) பிண்டமும் சக்தியும் பிரளயத்தில் சிக்கிக் கொள்ளலாம் ! பிரபஞ்சம் வெப்ப முறிவில் "பெருங் குளிர்ச்சி" (Big Chill) உண்டாகி முடிவடையலாம் ! அல்லது விரிந்தவை அனைத்தும் "பெருங் சுருக்கத்தில்" (Big Crunch) மீண்டும் ஒடுங்கிக் கொள்ளலாம் ! அல்லது "பெரு முறிவில்" (Big Rip) நொறுங்கிப் போகலாம் !
Fig. 1E
The Three Possible Scenarios Of the Universe
அகிலப் போக்கின் மூன்று வித முக்கிய முடிவுகள் !
பிரபஞ்சத்தின் இறுதி முடிவு பல்வேறு நிபந்தனைகளைச் சார்ந்துள்ளது. பொதுவாக காலாக்ஸிகளைத் துரிதமாய் உந்தி விலக்கி வைக்கும் கருஞ்சக்தி என்பது என்ன, மற்றும் அதன் கோர விளைவுகள் என்ன என்னும் வினாக்களுக்குக் கிடைக்கும் விடைகளைப் பொருத்தது. இங்கே நான்கு வித முடிவுகளை அதாவது இருவிதப் பெருங் குளிர்ச்சி, பெரு முறிவு அல்லது பெருஞ் சுருக்கம் (Big Chill -1 & Big Chill -2, Big Rip & Big Chrunch) பற்றி ஆராயப் போகிறோம். அவற்றில் பெருமளவு உறுதியான முடிவுகள் இரண்டு : பெருங் குளிர்ச்சி அல்லது பெரும் முறிவு ! நான்கு எதிர்பார்ப்பு முடிவுகளை உளவும் போது ஆரம்ப கால நிகழ்ச்சி "பெரு வெடிப்பாகவே" (The Big Bang Event) எடுத்துக் கொள்ளப்படுகிறது. அடுத்து கருஞ்சக்தி (Dark Energy) உதித்த போது எழும் கேள்வி இதுதான் : கருஞ்சக்தியின் திணிவு (Density of Dark Energy) மெதுவாக மிகையானதா அல்லது துரிதமாக மிகையானதா ? கருஞ்சக்தியின் திணிவு மெதுவாக மிகையானல் விளைவு : பெருங் குளிர்ச்சி -2 (Big Chill -2) !
கருஞ்சக்தியின் திணிவு விரைவாக மிகையானல் விளைவு : பெரு முறிவு (Big Rip) !
Fig. 1F
Three Shapes of the Universe

பிரபஞ்சத்தின் வடிவம் என்ன என்று முதலில் ஆராயலாம். மூன்று வித வடிவங்களை அனுமானித்துக் கொள்ளலாம். முதல் வடிவம் தட்டை வடிவம் (Flat Universe). இரண்டாவது பேரளவில் உப்பிய ஆனால் எல்லைக் குட்பட்ட மூடிய வடிவம் (Expanding but Closed Universe), மூன்றாவது விரியும் திறந்த வடிவம் (Expanding But Open Universe) ! தட்டை வடிவத்தில் பிரபஞ்சத்தின் விரிவு வீதம் (Expansion Rate) மெதுவாகிக் கொண்டே போகும். முடிவில் சமநிலை அடைந்து விரிவு நிகழ்ச்சி முற்றிலும் நின்று போகும். காலாக்ஸிகள் தனிப்பட்ட பிண்டத் தீவுகளாய் சூனியக் கருங்கடலில் பெருங் குளிர்ச்சி (Big Chill-1) நிலையில் முடங்கிக் கிடக்கும் ! அடுத்து கருஞ்சக்தி பிரபஞ்ச விரிவை துரிதமாக்கிப் பிளக்காத முறையில் நின்று விட்டால், பிண்டம் விரிவைச் சமநிலைப் படுத்திப் பெருங் குளிர்ச்சி (Big Chill-2) நேர்ந்து விடும். பொதுவாகத் தட்டைப் பிரபஞ்சத்தில் இந்த முறை விரிவாக்கம் செய்திடப் பெருங் குளிர்ச்சியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

Fig. 1G
The Role of Dark Energy In the Universe
மூடிய பிரபஞ்சத்தில் நிகழப் போவது வேறான முடிவு. பிரபஞ்சத்தில் வெறும் பிண்டம் மட்டுமே இருக்குமானால் அல்லது கருஞ்சக்தியே இல்லாமல் போனால் ஈர்ப்புச் சக்தியின் வலு ஓங்கி பிரபஞ்சத்தின் விண்மீன்கள், அண்ட கோளங்கள் மீண்டும் ஓடுங்கிப் பெரு வெடிப்பு நிகழ்ச்சியின் எதிர்முறைக் குவிப்பு இயக்கமாகி "ஒற்றை வெப்பத் திணிவாய்" மாறிவிடும் (Collapsing into Hot Dense Singularity). இதுவே "பெருஞ் சுருக்கம்" (Big Crunch) என்று குறிப்பிடப்படுகிறது ! மூன்றாவது கருஞ்சக்தி காலாக்ஸிகளை மிகத் துரிதமாக விரைவாக்கினால் பிரபஞ்சத்தைச் சுக்கலாகப் பிளந்து முறித்துவிடும் ! அகிலத்தின் பேருருவம் படைத்த அசுரக் கொத்துகள், கொத்துகள் (Super Clusters & Clusters) யாவும் கிழிந்து போய்விடும். அதுபோல் பிறகு காலாக்ஸிகள், அண்டக் கோள்கள், இறுதியில் அணுக்கள் கூடச் சிதைந்து விடும். இந்த முடிவு கருஞ்சக்தியால் விளையும் "பெரு முறிவு" (Big Rip) என்று குறிப்பிடப்படுகிறது !
Fig. 2
Our Recycled Universe
உப்பி விரியும் பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியின் விளைவுகள் !
பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை ஆகிய புதிர்கள் இருப்பது கண்ணுக்கு நேராகத் தெரியாத போதும் கருவிகளின் மறைமுக உளவுகள் மூலமே அறியப் பட்டுள்ளன ! விலக்கு விசையான கருஞ்சக்தி காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாக விரைவாக்கிப் பிரிப்பது ஒருவகையில் நல்லதா அல்லது பெருவாரியாகக் கேடு விளைவிப்பதா என்பது தெரியவில்லை ! வெறும் ஈர்ப்பு விசை மட்டும் இருந்திருந்தால் காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த முறையில் காலாக்ஸிகளை மோத விடாமல் விலக்கு விசை ஈர்ப்பு விசைக்கு எதிராகப் பிரிக்கிறது.
கருஞ்சக்தி, கரும்பிண்டம் ஆகிய இரண்டில் கருஞ்சக்தியே மிக்கப் புதிராக நிலவி வருகிறது. காலாக்ஸிகளை விரைவாக்கும் கருஞ்சக்தியின் தெரியாத உட்பொருள்கள் (Components of Dark Enery) பிரபஞ்சத்தின் தலைவிதியை முடிவு செய்யும் ! மேலும் பிண்ட-சக்தி சமன்பாடு கூறுவது போல் பிரபஞ்சத்தில் கரும்பிண்டமும், கருஞ்சக்தியும் சமநிலையில் நிலவவில்லை ! பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியே 74% ஆகவும் கரும்பிண்டம் 22% ஆகவும் அமைந்திருப்பது இன்னும் புதிராக உள்ளது !
Fig. 3
Model of inflated Universe
பிரபஞ்சத்தில் இயற்கையாகக் கருஞ்சக்தி கரும்பிண்டத்தை விட சுமார் மூன்று மடங்கிருப்பது காரணத்தோடுதான் ! அப்போதுதான் சுழலும் காலாக்ஸி ஒளிமந்தைகளுக்கு அகிலத்தில் நகர்ந்து பயணம் செய்ய விலக்கு விசை கிடைக்கிறது ! வெறும் ஈர்ப்புச் சக்தி மட்டும் இருந்திருந்தால் பிரபஞ்சத்தில் நகர்ச்சி இல்லாது முடக்கமே நிலவி இருக்கும்.
தான் கருதிய "நிலைத்துவப் பிரபஞ்ச மாதிரியில்" (Static Universe Model) கருஞ்சக்திக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முதலில் "அகில நிலையிலக்கம்" (Cosmological Constant) என்று பெயர் வைத்தார். பிறகு தான் செய்தது பிழையானது என்று அவரே அதை நீக்கினார். ஆனால் பின்னாளில் அதுவே சூனியச் சக்தி (Vacuum Energy) அல்லது கருஞ்சக்தி (Dark Energy) என்று பெயர்களில் குறிப்பிடப்பட்டது. அகில நிலையிலக்கத்தை ஐன்ஸ்டைன் பிண்டத்தின் ஈர்ப்பு விசைக்கு எதிரான "விலக்கு ஈர்ப்பு விசை" (Repulsive Gravitational Force) ஆகப் பயன்படுத்தினார். விண்வெளி மெய்யாகச் சூனியமில்லை என்பதே அது குறிப்பிடுகிறது.
Fig. 4
High Entropy & Low Entropy Universe
அகிலத்தில் சூனிய சக்தி எனப்படும் கருஞ்சக்தி சமநிலையில் பின்புலமாய் நிரம்பி யுள்ளது. அந்த சக்தியில் துகள் எதிர்த்துகள் என்னும் இரட்டைத் துணைகள் எழுந்தும் எழாமலும் வசிக்கின்றன. பிரபஞ்சம் உப்பி விரியும் போது கருஞ்சக்தியின் திணிவு மாறாமல் நிலையாக (Dark Energy Stays Constant, as Universe Expands) இருக்கிறது ! இந்த நியதிப்படி பிரபஞ்சத்தில் எத்துணை பரிமாண அளவுக் கருஞ்சக்தி இருக்க வேண்டும் என்று கணிக்கும் போது பிரச்சனை எழுகிறது. அப்படிக் கணித்திடும் போது அதன் மதிப்பீடு நோக்கிய அளவை விட 10^120 மடங்கு இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
பிரபஞ்சத்தின் இறுதி முடிவு நெருங்கி விட்டதா ?
அகிலத்தின் முடிவுக்குக் காலம் எப்போது வருமென்று யாரும் இதுவரை அனுமானிக்க வில்லை ! தற்போது பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆகிவிட்டன என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தாலும் எப்போது பிரபஞ்சத்தின் மரணம் இருக்கலாம் என்று தீர்மானமாக யாரும் இதுவரை ஊகிக்கக் கூட முடியவில்லை ! பிரபஞ்சம் உப்பி விரிவதில் கரும்பிண்டமும், கருஞ்சக்தியும் வெவ்வேறு கடமைகளைச் செய்து வருகின்றன.
Fig. 5
The Multiverse Stage
கரும்பிண்டம் பெரும்பான்மைக் கவர்ச்சி விசையாகப் பயன்பட்டு பிரபஞ்ச விரிவிக்கு ஓர் உன்னதத் "தடைக் கருவியாக" (Brake) நிலவி வருகிறது ! அதே சமயத்தில் கருஞ்சக்தியானது பிரபஞ்ச காலாக்ஸி ஒளிமந்தைகளை நகர்த்திச் செல்லும் உந்து விசையாக (Gas Pedal or Accelerator) இயங்கி வருகிறது !
பிரபஞ்ச வாகனத்தை இயக்க உந்து விசையும் தேவை ! தடை விசையும் தேவை ! பிரபஞ்சம் பிள்ளைப் பிராயத்தில் இருந்த போது விண்வெளி சிறிதாக இருந்தது ! அப்போது கவர்ச்சி விசையின் கைப்பலம் ஓங்கியது ! அனைத்துக் காலாக்ஸிகளும் நெருங்கி இருந்தன ! விண்வெளியின் விரிவு மெதுவாக நிகழ்ந்தது. பிரபஞ்சத்தின் வயது 5 பில்லியன் ஆண்டுகளாய் இருந்த போது சாதாப் பிண்டமும் கரும்பிண்டமும் மெலிவாகிக் கருஞ்சக்தியின் வலு ஓங்கியது. அதிலிருந்து ஆரம்பித்த பிரபஞ்சத்தின் உப்பிய விரிவாக்கம் துரிதமாகி ஒளிமந்தைகள் விரைவாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இயற்கை ஏன் பிரபஞ்சத்தின் விரைவாக்கப் பெடலை (Accelerator Pedal) வேகமாய் அழுத்துகிறது என்பதற்குக் காரணம் தெரியவில்லை ! பிரபஞ்சம் பெருங்குளிர்ச்சியில் மடியுமா அல்லது பெரும் முறிவில் முடியுமா என்பதும் யாருக்கும் தெரியவில்லை ! பிரபஞ்சத்துக்கு மரணம் எப்படி இருந்தாலும் அது நேர டிரில்லியன் (10^12) கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கும் போது பொதுநபர் ஏன் அதை நினைத்து மனமுடைந்து போக வேண்டும் ?
Fig. 6
The Big Bounce Theory